சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக.. தேமுதிக.. பாமக.. 4 நாட்களில் தொடங்குகிறது பாஜகவின் கூட்டணி ஆலோசனை.. என்ன கணக்கு!

தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகளுடன் பாஜக இன்னும் 4 நாட்களில் தனது கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகளுடன் பாஜக இன்னும் 4 நாட்களில் தனது கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது.

பாஜகவிற்கு ஏனோ தமிழகம் மட்டும் எப்போதும் பிரச்சனைக்குரிய மாநிலம்தான். மற்ற மாநிலங்களில் தேர்தல் முடிவுதான் பிரச்சனை என்றால், தமிழகத்தில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையே பாஜகவிற்கு பிரச்சனையாக இருக்கிறது.

லோக் சபா தேர்தலுக்காக தமிழகத்தில் பாஜக பெரிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. ஆனால் இதற்கான ஆலோசனை கூட்டம் நடப்பது மட்டும் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

3 முறை தள்ளிப்போனது

3 முறை தள்ளிப்போனது

பாஜக இந்த கூட்டத்தை முதலில் ஜனவரி 18ம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தது. அதன்பின் 20ம் தேதி நடத்துவதாக இந்த திட்டம் தள்ளிப்போனது. அதன்பின் மூன்றாவது முறை தள்ளிப்போய் தற்போது இந்த கூட்டணி ஆலோசனை குறித்த இறுதி தேதி முடிவாகி உள்ளது. அதன்படி வரும் 27ம் தேதி ஆலோசனை கூட்டம் இதற்காக நடக்க உள்ளது. இதற்காக பாஜக தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயல் வரும் 27ம் தேதி தமிழகம் வருகிறார்.

என்ன காரணங்கள்

என்ன காரணங்கள்

இந்த கூட்டங்கள் தள்ளிபோனதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. பாஜகவில் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உடல் நலமில்லாமல் இருந்தது. தமிழகத்தில் பாஜக கூட்டணி வைக்க நினைக்கும் கட்சியின் தலைவர்கள் சிலர் வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சையில் இருந்ததும், தனிப்பட்ட விஷயங்களுக்காக வெளியூர் சென்றதும் காரணமாக கூறப்படுகிறது.

3 கட்சிகள் ஆலோசனை

3 கட்சிகள் ஆலோசனை

மொத்தம் 3 கட்சிகளுடன் பாஜக ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி அதிமுக, பாமக, தேமுதிமுக ஆகிய கட்சிகளுடன் பாஜக ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது. வாய்ப்பிருக்கும் பட்சத்தில் நான்காவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி ஆலோசனை நடத்தவும் வாய்ப்புள்ளது.

எப்போது ஆலோசனை

எப்போது ஆலோசனை

மொத்தம் 4 நாட்கள் இந்த ஆலோசனை நடக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். முதல் நாள் அதிமுகவுடனும், பின் பாமக, தேமுதிமுக என்று வரிசையாக ஆலோசனை செய்ய இருக்கிறார்கள். இந்த மாத இறுதியில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து உடனே கூட்டணி உடன்படிக்கை குறித்த அறிவிப்பு வரும் என்று கூறுகிறார்கள்.

என்ன கணக்கு

என்ன கணக்கு

இந்த கூட்டணி கணக்கு எப்படி இருக்கும் என்பது குறித்தும் சில தகவல்களை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதன்படி அதிமுக 21 இடங்கள் பாஜக 7 இடங்கள், பாமக 6 இடங்கள், தேமுதிக 4 இடங்கள் என்று இந்த கூட்டணி அமையும். மீதமுள்ள இரண்டு இடங்கள் சிறிய கட்சிகளுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது, என்று கூறுகிறார்கள்.

English summary
BJP Alliance meeting with 3 Major TN parties to be held from Jan 27.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X