சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

30 - 25 - 15.. இவ்வளவுதான் முடியும்.. உடும்பு பிடியில் அதிமுக.. கையை பிசையும் பாஜக, பாமக, தேமுதிக

அதிமுக கூட்டணியில் மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணி கட்சிகள் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாகவும், தங்களுக்கான சீட் பேரங்களை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக -பாஜகவின் பிரச்சனை நீடித்து கொண்டே இருக்கிறது.. முதல்வர் வேட்பாளராக எடப்பாடியாரை பாஜக மனசார ஏற்கவில்லை.. அதேசமயம், ஓபிஎஸ்சும் மவுனம் காத்து வருகிறார்.. இதனால், பாஜக ஏதாவது சைலண்ட்டாக காய் நகர்த்தி வருகிறதா என்ற சந்தேகமும் தமிழக அரசியலை கவ்விக் கொண்டுள்ளது.

BJP and PMK are asking AIADMK for more seats

ரஜினியின் முடிவு வெளியாகும்வரை அமைதி காத்த கட்சிகள், இப்போது தங்கள் கூட்டணியை உறுதி செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றன.. இதனால், அதிமுக கூட்டணி அப்படியே மறுபடியும் தொடரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தேர்தல் தேதிக்குள் கூட்டணியை முமடிவு செய்துவிடுவதிலும் அதிமுக ஆர்வம் காட்டி வருகிறது.

அந்த வகையில், பாஜகவிற்கு 30, பாமகவிற்கு 25, தேமுதிகவுக்கு 15 என்று முடிவாகி உள்ளதாம்.. அப்படியானால் மீதமுள்ள தொகுதிகள் அனைத்திலுமே அதிமுக போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.. அதாவது தங்கள் கூட்டணியில் உள்ள தமாகா போன்ற கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வைக்க யோசித்து வருகிறதாம்.. ஆனால், இதற்கு பாஜக, பாமக இரண்டு கட்சிகளுமே ஏற்பார்களா என்று தெரியவில்லை.. பாஜக 40-ல் நிற்கிறது.. பாமக 35-ல் நிற்கிறது... இதுதான் இப்போதைக்கு சிக்கலாகவும், இழுபறியாகவும் உள்ளதாம்.

ரஜினியின் 'குட்பை' முடிவால் கூட்டணி விவகாரத்தில் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட பாமக, தேமுதிக ரஜினியின் 'குட்பை' முடிவால் கூட்டணி விவகாரத்தில் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட பாமக, தேமுதிக

எப்படி பார்த்தாலும் 150-க்கு கீழே அதிமுக போட்டியிடாது என்று சொல்கிறார்கள். 170 என்றே வைத்து கொண்டாலும், 120-தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை கையில் வைத்திருக்க வேண்டும் என்று அதிமுக நினைக்கிறதாம்.. இதில், பாமகவுக்கோ, பாஜகவுக்கோ அதிக தொகுதிகளை ஒதுக்கிவிட்டால், அது அத்தனையும் திமுகவுக்கே சாதகமாக போய்விடும் என்பதிலும் அதிமுக கவனமாக இருப்பதாக சொல்லப்படுகிறது!

English summary
BJP and PMK are asking AIADMK for more seats
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X