சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணாமலை அதுக்கும் தயங்க மாட்டார்.. ஆதாயத்துக்காக அரசியலுக்கு வந்தவர்.. போட்டு தாக்கும் திமுகவினர்!

பாஜகவின் அண்ணாமலை கூறிய கருத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: "நேற்று வந்த அண்ணாமலை எல்லாம் திமுகவை பற்றி பேசுறது காமெடியாதான் இருக்கு.. ஆதாயத்துக்காக கட்சிக்கு வருபவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்று திமுகவினர் கொந்தளித்து பேசுகிறார்கள்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை, "அண்ணா பல்கலை விவகாரத்தில் திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது முட்டாள்தனமானது.

BJP Annamalai has criticized DMK Party

எதையும் ஆராய்ந்து பார்க்காமல் சம்பந்தமில்லாமல் பேசுவது உளறுவது தெளிவில்லாததே அக்கட்சியின் நிலைப்பாடாக தொடர்ந்து உள்ளது என்றும், 2ஜி வழக்கில் மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவில்லை. வழக்கு வேகமெடுப்பதால் கனிமொழி அச்சத்தில் உளறுகிறார் என்றும் கூறியிருந்தார்.

அண்ணாமலை இவ்வாறு நேரடியாக திமுகவை குற்றஞ்சாட்டியிருப்பது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து அவர்கள் சொல்லும்போது, "நேற்று வந்த அண்ணாமலைக்கு எல்லாம் கட்சியை பற்றி என்ன தெரியும்.. நாளைக்கே திமுக அமைத்தால், அங்க போறதுக்கும் இவர் தயங்க மாட்டார்.. இப்போதுகூட எதையோ குறிக்கோளாக வைத்து கொண்டுதான் கவுரவமான அரசு வேலையை விட்டுட்டு கட்சிக்கு வந்திருக்கிறார்.. அதனால் ஆதாயங்கள் என்பது பொதுவானவை

இவருக்கு உண்மையிலேயே மக்கள் மேல அக்கறை இருந்திருந்தால், வேலையில் இருந்து கொண்டே சேவை செய்திருக்க வேண்டியதுதனே? சகாயம் அப்படித்தானே செய்றார்? திடுதிப்பென அரசியலில் குதித்துவிட்டு, ஒரு திராவிட கட்சியை இப்படி குறை சொல்ல கூடாது.

அந்த கேஸ் விசாரணை நடந்துட்டு இருக்கும்போது கருத்து எதுவும் சொல்றதுக்கு இல்லை. வழக்கை விரைவாக நடத்தி தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்றால் பாஜக அதை 2014 முதல் 2019 வரை செய்திருக்க வேண்டியதுதானே? இதெல்லாம் அரசியல் உள்நோக்கம்தான்.. அதுக்காக "உளறுகிறார்" என்று மேம்போக்காக எதையாவது சொல்லக்கூடாதா? வழக்கை சட்டப்படி சந்திக்க அவங்களுக்கு தெரியும்" என்றனர்.

English summary
BJP Annamalai has criticized DMK Party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X