தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்தனும் - சொல்கிறார் பாஜக அண்ணாமலை
சென்னை : தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை மூலம் கூறியுள்ளார்.
அரியலூர் அருகே பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மரணத்திற்கு முன்னர் அந்த மாணவி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில் பள்ளியில் மதமாற்றம் செய்ய முயன்றதால் மாணவி தற்கொலை செய்தார் என்றும் தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது ஏன்?.. பாஜக அண்ணாமலை சொல்லும் காரணம் என்ன?

அண்ணாமலை அறிக்கை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரியலூர் அருகே ஏழை விவசாயி மகளான 17 வயது மாணவி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார் எனவும் பள்ளியில் மிக நன்றாகப் படிக்கும் அந்த மாணவி தற்போது 12-ம் வகுப்பு படித்து வந்தார் என கூறியுள்ளார்.

மதமாற்றம் செய்ய முயற்சி
தொடர்ந்து அறிக்கையில் தெரிவித்துள்ள அண்ணாமலை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளி பணியாளர் ஒருவர் மாணவியை மதம் மாறச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் மாணவியின் பெற்றோர்களை சந்தித்து அவர்கள் ஏழ்மையை பயன்படுத்தி வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளதாக கூறியுள்ள அண்ணாமலை மாணவிகள் மற்றும் மாணவியின் பெற்றோர் இதற்கு ஒத்துழைக்காத காரணத்தால் மாணவியை படிக்க விடாது விடுதியின் கணக்கு வழக்குகளையும் வேலைகளையும் செய்ய மாணவியை கட்டாயப்படுத்தி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக அண்ணாமலை கூறியுள்ளார்.

மாணவி தற்கொலை
மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தி பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் தொடர்ந்து, பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த மாணவி மரணத்திற்கு முன் பேசிய வீடியோ பதிவு மனதை பதறவைக்கும் எனவும் நடுநிலையான விசாரணை நடைபெற்று தவறு செய்தவர் கைது செய்யப்பட வேண்டும் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவியும் அரசு வேலையும் அளிக்கப்பட வேண்டும் என அறிக்கையில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

கட்டாய மதமாற்ற தடை சட்டம்
மேலும் தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்திலும் மதமாற்றம் தமிழகத்தில் வேகமாக பரவுகின்றது ஏழை மக்களை துன்புறுத்தி இது போன்ற காரியங்கள் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதற்கு மாநில அரசு கவனம் கொடுத்து நிலைமையை கொண்டுவரவேண்டும் எனவும் மாணவியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.