சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெறும் நாலே மாசத்தில் திமுகவா இப்படி?.. ஹனிமூன் பீரியட் பூராவும் பொய்கள்.. பாஜக அண்ணாமலை அட்டாக்

திமுக விமர்சித்து பேட்டி தந்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Google Oneindia Tamil News

சென்னை: திமுக இப்போது ஹனிமூன் பீரியட்டில் உள்ளது.. ஆட்சிக்கு வந்து 4 மாதம்தான் ஆகிறது.. ஆனால் இந்த 4 மாதத்தில் இவ்வளவு தவறுகளையா செய்வது? ஏராளமான பொய்களும் உண்டு.. தமிழ்நாட்டில் உள்ள ஒரே அறிவாளி பொருளாதார புலி தான் மட்டுமே என்று பிடிஆர் எண்ணி கொள்கிறார்" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜகவின் நிறுவன தலைவர்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாவின் 106 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி தி.நகர் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்திற்கு அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பிறகு, "இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்" என்ற பிரச்சார வெப்சைட்டை துவங்கி வைத்தார்.. இறுதியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது:

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை Live: பாகிஸ்தானுக்கு பதிலடி தருவாரா?ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை Live: பாகிஸ்தானுக்கு பதிலடி தருவாரா?

 கிச்சன் கேபினட்

கிச்சன் கேபினட்

ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை வந்தவுடன் மம்தா, உத்தவ் தாக்ரே காங்கிரஸ் திமுக போன்றவர்களின் கிச்சன் கேபினட் வெளியே வருகிறது... ஏகே ராஜன் ரிப்ரோட்டில் பயங்கர முரண்பாடுகள் உள்ளன.. ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கையை விட ஏ.கே.ராஜன் அறிக்கை சிறப்பாகவே இருந்தது.. மக்களிடம் தவறான தகவல்களை தெரிவிக்க திமுகவின் தேர்தல் அறிக்கையுடன் போட்டி போட்டுள்ளது ஏ.கே.ராஜன் அறிக்கை.

 எய்ம்ஸ்

எய்ம்ஸ்

ஏனெனில், அந்த ரிப்போர்ட்டில் நீட் சமூக நீதிக்கு எதிரானது என்ற கருத்தை வலுப்படுத்துவதாக தெரியவில்லை.. மாறாக, இரண்டரை லட்சத்திற்கு கீழ் வருமானம் பெறுபவர்களின் குழந்தைகள் நீட் மூலம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது... இந்த வருடம் 150 மாணவர்களோடு எய்ம்ஸ் திறக்க மத்திய அரசு அனுமதி தந்தும், தமிழக அரசு எய்ம்ஸை திறக்க வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கிறது.

 வியாபார சந்தை

வியாபார சந்தை


இது மட்டும் சமூக நீதிக்கு எதிரானது இல்லையா? இதுக்கு காரணம், இவர்கள் நடத்தும் கல்லூரிகளில்தான் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நீட் வந்த பிறகுதான் பண முதலைகள் கட்டுபாட்டுக்குள் வந்திருக்கிறார்கள்.. தமிழகத்தில் வியாபார சந்தையாக கல்வியை வைத்திருந்த 3 மாவட்டங்களை நீட் உடைத்திருக்கிறதே, அதை ஏன் ஏ.கே.ராஜன் கமிட்டி பேசவில்லை?

 தரவுகள்

தரவுகள்

அரசுக்கு சாதகம் இல்லாத விஷயங்களை இந்த அறிக்கையில் ஏன் சேர்க்கவில்லை? அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவே ஒரு அரசு சிந்திக்க வேண்டுமே தவிர, அரசியல் செய்ய தேவையில்லாத விஷ பரீட்சையை கையில் எடுக்க கூடாது. 99 சதவீதம் நீட் பயிற்சி மையம் சென்று பயிற்சி எடுத்துள்ளனர் என்று ஏகே ராஜன் சொல்கிறாரே.. அதற்கு என்ன ஆதாரம்? அதுவும் அரசு சொன்னதாக சொல்கிறாரே? அந்த தரவுகள் எங்கே?.நீட் வந்தால் தமிழகத்தில் மருத்துவ கல்லூரி ஏழை மாணவர்கள் காணாமல் போய்விடுவர் என்று சொல்கிறாரே?

 ஹனிமூன்

ஹனிமூன்

இதை சொல்வதற்கு ஏ.கே.ராஜனுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒரு அரசியல்வாதி போல ஏ.கே.ராஜன் பேசுகிறாரே தவிர, ஒரு கமிட்டியின் தலைவர் போல பேசவில்லை. இப்போது உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.. எங்கள் கூட்டணி சிறப்பாக இருக்கிறது.. இனியும் சிறப்பாகவே இருக்கும்.. திமுக கூட்டணி மாதிரி சண்டை போட்டுக் கொண்டு தனியாக நிற்க மாட்டோம்.. திமுக ஆட்சிக்கு வந்து நாலே மாதம்தான் ஆகிறது.. ஹனிமூன் பிரியட்டில் இருக்கிறது.. ஆனால், இந்த மாதத்தில் அவர்கள் செய்த தவறுகள் ஏராளம்.. பொய்கள் ஏராளம்..

நகைக்கடன்

நகைக்கடன்

அன்னைக்கு உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில், நகைகடன் தள்ளுபடி என்று நகைகளை அடகு வைக்க சொன்னாரே.. ஆனால் சட்டசபையில் முறைகேடாக அடகு வைத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் சொல்கிறார். இது சரியா? முதல்ல அவர் தன்னுடைய மகன் மீது நடவடிக்கை எடுப்பாரா? இதையெல்லாம் நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் மக்களிடம் எடுத்து செல்வோம்... எங்க கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு தருவார்கள்.

 பொதுஅறிவு

பொதுஅறிவு

நிதியமைச்சரின் ட்வீட்டை பொறுத்தவரை, பொது அறிவு மனிதனுக்கு மிக முக்கியம்... தமிழ்நாட்டில் உள்ள ஒரே அறிவாளி பொருளாதார புலி தான் மட்டுமே என்று அவர் எண்ணி கொள்கிறார்... அவர் முதலில் நிதி சுமையை சீர்படுத்த வேண்டும்... 3 கருத்துக்களை சொல்லி வருகிறாரே தவிர, அவரது நோக்கம் சரியில்லை" என்றார்.

English summary
BJP Annamalai says about AK Rajan committee report on NEET
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X