சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அண்ணாமலை திடீர் புகார்.. ஆளுநருக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு.. கூட்டணி முறிகிறதோ??

அதிமுக அரசை குற்றஞ்சாட்டி உள்ளார் அண்ணாமலை

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவின் அண்ணாமலை ஆளும் தரப்பு மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.. தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக செயல்பட்டுவிட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்றுமுன்தினம் வரை ஒப்புதல் தராமல் இருந்தார்.. ஏற்கனவே கால தாமதம் ஆன நிலையில், மேலும் அதற்கான அவகாசம் கேட்டிருந்தார்.

ஆனால், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.. அந்த அரசாணைக்கான விளக்கத்தையும் முதல்வர் தந்திருந்தார்.. இதையடுத்து, ஆளுநர் மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து முதல்வரும் ஆளுநரை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார் - அன்றே சொன்ன எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார் - அன்றே சொன்ன எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்

 குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இந்நிலையில்தான் பாஜகவின் அண்ணாமலை ஆளும் தரப்பு மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.. தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக செயல்பட்டுவிட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு.. ஆனால் தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக செயல்பட்டுவிட்டது.. ஆளுநர் காலதாமதப்படுத்திவிட்டதாக இதை நான் பார்க்கவில்லை.

 பரபரப்பு

பரபரப்பு

ஒரு ஜனநாயக நாட்டில் இது போல நடப்பது சகஜம்தான்.. தொடர்ந்து இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாஜக இருப்பதாக பரப்பப்படுவதில் அரசியல் உள்ளது... பிற்படுத்தப்பட்டோர் முன்னேறவேண்டும் என்றுதான் பாஜக நினைக்கிறது" என்றார். அண்ணாமலை இப்படி பேசியதை சாதாரணமாக எடுத்து கொண்டு கடந்து போய்விட முடியாது.

கூட்டணி

கூட்டணி

ஏற்கனவே பாஜக - அதிமுகவுக்கு இடையே நிறைய விஷயங்களில் முரண்பாடுகள் உள்ளன.. சமீப காலமாக இணக்கமான போக்கும் அவ்வளவாக இல்லாத சூழலில் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை பாஜக அதிமுக மீது முன்வைக்கிறது. குஷ்பு கைதானபோதும், இப்படித்தான் எல்.முருகன் அதிமுகவை விமர்சித்தார்.. திமுகவுக்கு எல்லாம் போராட்டத்துக்கு அனுமதி தரும்போது, தங்களுக்கு ஏன் தரவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

பிடிவாதம்

பிடிவாதம்

மற்றொரு புறம், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக பாஜக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்பதிலும் பிடிவாதமாக இருக்கிறார்.இன்னொரு புறம், தனித்து போட்டியிட்டாலும் 70 சீட் வாங்குவோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்.. இப்படி நாளுக்கு நாள் பாஜகவின் பேச்சு அதிமுகவிடம் இருந்து தனித்து காட்டி வருவதாகவே தெரிகிறது.

English summary
BJP Annamalai slams ADMK gov over 7.5% reservation issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X