சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூத்துக்குடியை கேட்டு இருக்கோம்.. பார்க்கலாம்.. கனிமொழிக்கு எதிராக களமிறங்கும் தமிழிசை?

லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக போட்டியிட முடிவு செய்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கனிமொழி, வைகோ முதல் தமிழிசை வரை, போட்டியிட போகும் தொகுதிகள் என்ன?- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக போட்டியிட முடிவு செய்து இருக்கிறது.

    லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட எம்.பி கனிமொழி முடிவு செய்து உள்ளார். அவர் இதற்காக நேற்று விருப்பமனு தாக்கல் செய்து உள்ளார்.

    சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அவர் விருப்ப மனு அளித்தார். கனிமொழி தற்போது ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார்.

    திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள்திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள்

    பாஜக முடிவு

    பாஜக முடிவு

    இந்த நிலையில் அதே தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட பாஜக முடிவு செய்து இருக்கிறது. இது குறித்து நிறைய அரசியல் கணிப்புகள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வராமல் இருந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    அவர் தனது பேட்டியில், தூத்துக்குடி தொகுதியை கேட்டு இருக்கிறோம். அதிமுகவிடம் தூத்துக்குடி தொகுதியை பாஜக கேட்டுள்ளது. அதேபோல் பாஜக பலமாக இருக்கும் ஐந்து தொகுதிகளை நாங்கள் கேட்டு இருக்கிறோம்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவோம். அதிமுக தலைவர்களுடன் பேசி முடிவு செய்வோம். பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளும் விரைவில் அறிவிக்கப்படும், என்று குறிப்பிட்டுள்ளார்.

    யார் போட்டி

    யார் போட்டி

    இதனால் தற்போது கனிமொழிக்கு எதிராக பாஜக களமிறங்குவது உறுதியாகி உள்ளது. தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக தமிழிசை போட்டியிடுவாரா, இல்லை வேறு யாராவது நிற்க வைக்கப்படுவார்களா என்று பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாஜக போட்டியிட போகும் மீதமுள்ள தொகுதிகள் என்ன என்பதும் கேள்வியாக உள்ளது.

    English summary
    BJP asks Tuticorin in AIADMK alliance: Tamilnadu BJP chief Tamilisai may contest against DMK MP Kanimozhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X