சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியில் சிக்கிய ரூ. 2 கோடி பணம்.. திருமா, ஸ்டாலினை சீண்ட பாஜக போட்ட கார்ட்டூன்

திருமாவளவன், ஸ்டாலினை விமர்சித்து பாஜக ட்விட்டரில் கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இப்போதெல்லாம் திமுக கூட்டணியை பாஜக விலாவரியாக உட்கார்ந்து விமர்சிப்பது எல்லாம் இல்லை.. ஸ்டிரைட்டா கார்ட்டூன்தான்! அதுவும் அதிகாரப்பூர்வ பாஜக ட்விட்டர் பக்கத்திலேயே தொடர்ந்து கேலி கிண்டல் செய்வதை கையில் எடுத்துள்ளது!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சில தினங்களுக்கு முன்பு தில்லை கோயிலுக்குள் சென்று தீட்சிதரிடம் ஆதரவு திரட்ட சென்றார்.

சென்றவருக்கு விபூதி பூசி, மாலை அணிவிக்கப்பட்ட, அந்த கோலத்துடனேயே அங்கிருந்தவர்களிடம் திருமாவளவன் வாக்கு சேகரித்தார். உடனே இதுக்கு ஒரு கார்ட்டூன் போட்டு திருமாவளவனை சனாதன தர்மத்துக்கு எதிரானவர் என்றும், வாக்குக்காக என்னவெல்லாம் செய்கிறார் பாருங்கள் என்றும் கேலி செய்தது தமிழக பாஜக!

கார்ட்டூன்

கார்ட்டூன்

இப்போது திரும்பவும் திருமாவளவனையே சீண்டி கார்ட்டுன் போட்டுள்ளது. 2 தினங்களுக்கு முன்பு பெரம்பலூர் பகுதியில் பறக்கும் படையினர் ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரின் 4 கதவுகளின் உள்ளே ரூ.2.10 கோடி ரொக்கப்பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.

 4 பேர் கைது

4 பேர் கைது

இது சம்பந்தமாக விசாரணை நடத்தியதில் காருக்குள் இருந்தவர்கள் விசிக நிர்வாகிகள் தங்கதுரை, பிரபாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் என தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

முக ஸ்டாலின்

இப்போது இந்த விஷயம்தான் தமிழக பாஜக ட்விட்டரில் கேலியாக பதிவிடப்பட்டுள்ளது. இதில் திருமாவளவனையும் திமுக தலைவர் ஸ்டாலினையும் கார்டூனாக வரைந்துள்ளனர்.

 பச்சை கலர் கதவு

பச்சை கலர் கதவு

கார் கதவு பச்சை கலரில் உள்ளது. அந்த கதவினை ஸ்டாலினும், திருமாவளவனும் ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்திருப்பது போலவும், அக்கதவு லாக்கர் போலவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் "பணத்தை மறைத்து வைக்க நவீன காற்கதவு" என கிண்டல் செய்துள்ளனர்.

English summary
TN BJP has been criticized DMK Leader MK Stalin and Thirumavalavan arresting 4 VCK people with cash
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X