சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குஷ்புவுக்கு கொக்கி போட்ட பாஜக.. பட்டென்று ரிவிட் அடித்து புஸ்வாணமாக்கி அதிரடி.. கலகலத்த டிவிட்டர்!

Google Oneindia Tamil News

சென்னை: கூடிய சீக்கிரம் குஷ்புவை கமலாலயத்தில் எதிர்பார்க்கலாம் என்று தமிழக பாஜக கொக்கி போட, அதை ட்வீட் போட்டு அதிரடியாக மறுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் குஷ்பு!

Recommended Video

    BJP-தாவுகிறாரா Kushboo? | மீண்டும் DMK-வுக்கு Radha Ravi? |BJP களேபரம்

    தமிழகத்தில் தாமரையை மலர வைக்க பாஜக திணறி வருகிறது.. திராவிட பூமியில் என்ன செய்தாலும் காவி கொடியை நிலை நாட்ட முடியாமல், நிறைய அஸ்திரங்களை கையில் எடுத்து வருகிறது.

    பாஜக ஆளும் மாநிலங்களில் சமீப காலமாக கவர்ச்சி பிரபலங்களை களமிறக்கி வருகிறார்கள்.. அவ்வளவு ஏன், டிக்டாக் செய்து கொண்டிருந்த சோனாலி பொகத்தை அழைத்து வந்து ஹரியானாவில்சீட் தந்து நிற்க வைத்தார்கள்.. ஆட்டம், பாட்டங்களுடன் டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு என்ன அரசியல் தெரிந்திருக்க போகிறது? கடைசியில் அவர் தோற்றே போய்விட்டார்.

     என்னங்க சொல்றீங்க.. ராதாரவி கடுப்பாய்ட்டாரா.. திரும்பவும் திமுகவில் சேர போகிறாரா?! என்னங்க சொல்றீங்க.. ராதாரவி கடுப்பாய்ட்டாரா.. திரும்பவும் திமுகவில் சேர போகிறாரா?!

     ஜீவஜோதி

    ஜீவஜோதி

    அந்த வகையில், தமிழ்நாட்டில் சில பிரபலங்களையும் இழுத்துபோட முயற்சி நடந்து வருகிறது.. ஏற்கனவே அரசியலுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஜீவஜோதியை இழுத்து வந்தார்கள்.. அதேபோல இப்போது நமீதாவை கொண்டு வந்திருக்கிறார்கள்.. இவருக்கு தாமரை மலர்ந்தே தீரும் என்று சரளமாக சொல்ல கூட வரவில்லை.

     கமலாலயம்

    கமலாலயம்

    இப்படி தமிழக பாஜக திணறி வரும் வேளையில்தான், அக்கட்சியின் கல்யாணராமன் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், "விரைவில் குஷ்பூ சுந்தரை கமலாலயத்தில் எதிர்பார்க்கலாம்" என்று பதிவிட்டிருந்தார்.. இந்த ட்வீட்டை பார்த்து பலருமே அதிர்ச்சி அடைந்தனர்.. ஒரு தேசிய கட்சியில், குஷ்பு இணைவது குறித்து இவர் ஏன் ட்வீட் போட்டார், இவர் என்ன பாஜகவின் பிரதிநிதியா? அல்லது குஷ்புக்கு நூல் விட்டு பார்க்கிறாரா என தெரியவில்லை.

     குஷ்பு ட்வீட்

    குஷ்பு ட்வீட்

    ஆனால், எதையுமே துணிச்சலுடன் அணுகும் குஷ்பு, இதற்கு உடனடி பதிலடியை ட்வீட் போட்டு தந்தார்.. அதிலும் கல்யாணராமனுக்கு டேக் செய்து "பகல் கனவா??" (Day dreaming??) என்று கேட்டு ட்வீட்டை போட்டார். நேரடியாக குஷ்புவிடம் உட்கார்ந்து கட்சி தாவல் குறித்து பேசுவதைவிட்டு விட்டு, இப்படி, எடுத்த எடுப்பிலேயே ட்வீட்டில் இந்த தகவலை எப்படி இவரால் சொல்ல முடிந்தது தெரியவில்லை. அப்படியே ஒருவரை கட்சிக்கு இழுப்பதாக இருந்தாலும், இந்த அணுகுமுறை தவறும்கூட!

     திராவிட கட்சிகள்

    திராவிட கட்சிகள்

    அதுமட்டுமல்ல, வெறும் நட்சத்திர பேச்சாளர்களுக்கு மட்டும் பொறுப்புகளை தந்துவிட்டு, முக்கியமானவர்களை புறக்கணிப்பதை பாஜக தொடர்ந்து செய்கிறது.. இந்த பேச்சாளர்கள், நாளை வேறு கட்சிக்கும் தாவி செல்வதும் இயல்பாகவே நடந்துதான் வருகிறது.. இனியும் நடக்கதான் போகிறது. எனவே களத்தில் இறங்கி வேலை செய்யும் கட்சி தொண்டர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சியே வளர முடியும் என்பதே யதார்த்தம்.. அது பாஜகவாக இருந்தாலும் சரி, எந்த திராவிட, தேசிய கட்சிகளாக இருந்தாலும் சரி!

    English summary
    bjp: bjp kalyanaraman tweeted about kushboos politics
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X