சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Amit Shah: அமித் ஷா கடைசி வரை வரவே இல்லையே!

Google Oneindia Tamil News

Recommended Video

    அமித்ஷா சென்னை வருகை திடீர் ரத்து- வீடியோ

    சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார் எனக் கூறப்பட்ட நிலையில் கடைசி வரை அவர் வரவே இல்லை.

    தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. சில தினங்கள் முன்பாக சென்னை வந்த தமிழக பாஜக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களான அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரை தொழிலதிபர் இல்லத்தில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில், யாருக்கும் தெரியாமல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றதாக கூறப்பட்டது.

     அமித்ஷா வருகை

    அமித்ஷா வருகை

    இந்த நிலையில், திரைமறைவிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. ஒருவழியாக இப்போது எல்லாம் முடிந்த நிலையில் இன்று அதிமுக - பாஜக கூட்டணியும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அமித் ஷா சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக முரண்பட்ட தகவல்களும் வெளியாகி வந்தன.

    கூட்டணியில் சீட்

    கூட்டணியில் சீட்

    ஆனால் அமித் ஷா வரவே இல்லை. முன்னதாக, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், அதிமுகவிற்கு, மொத்தம் 25 தொகுதிகள் என்றும், பாஜகவிற்கு 8 தொகுதிகள் என்றும் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கடைசியில் பாஜகவுக்கு 5, பாமகவுக்கு 7+1 என அறிவிக்கப்பட்டு விட்டது.

    சிவசேனா கூட்டணி

    சிவசேனா கூட்டணி

    நேற்றைய தினம், மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்தது பாஜக. அமித்ஷா மும்பை சென்று, இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மறு தினமே தமிழகத்திலும், தனது கூட்டணியை அறிவிக்க உள்ளது பாஜக. திமுக இன்னமும் தனது கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்காத நிலையில், பாஜக, அதிமுக கூட்டணி விஷயத்தில் துரிதம் காட்டியுள்ளது.

    வெற்றிக்கான காரணம்

    வெற்றிக்கான காரணம்

    அதிமுகவுக்கு எதிராக அலை இருந்தாலும், சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள், நிதி உதவி திட்டங்கள் போன்றவை தங்கள் கூட்டணிக்கு வெற்றியைத் தேடி தரும் என்று நினைக்கிறது பாஜக. தேமுதிகவுடன் கூட்டணி இறுதியாகவில்லை என்பதால்தான் அமித் ஷா வருகை தள்ளிப் போயுள்ளதாக சொல்கிறார்கள்.

    English summary
    BJP chief Amit Shah comes Chennai to announce alliance with AIADMK on today, says sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X