தலைவர் நயினார்தான்.. ஆனா அவர் போட்டிருக்கும் டிரெஸ் அண்ணாமலையோடது.. கட்சியை கண்ட்ரோல் எடுத்த மலை?
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார். இருப்பினும், முன்னாள் தலைவரான அண்ணாமலைக்கு கட்சியில் இன்னும் செல்வாக்கு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலையின் செல்வாக்கு
அண்ணாமலைக்கு டெல்லியில் உள்ள தொடர்புகள் காரணமாக, தமிழக பாஜகவில் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் அவர் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துவதாகக் கூறப்படுகிறது. கட்சியின் தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனாக இருந்தாலும், கட்சியின் பல விவகாரங்களில் அண்ணாமலையின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
நயினார் நாகேந்திரனின் திட்டங்கள்
தமிழக பாஜக தலைவராகப் பதவி வகிக்கும் நயினார் நாகேந்திரன், கட்சி ரீதியாக சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளார். பொதுவாக, புதிய தலைவர்கள் தங்கள் நிர்வாக வசதிக்கேற்ப கட்சி நிர்வாகிகளை மாற்றுவது வழக்கம். அந்த வகையில், நயினார் நாகேந்திரனும் அண்ணாமலை நியமித்த நிர்வாகிகளை மாற்ற திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, அண்ணாமலைக்காக பணியாற்றிய மற்றும் கட்சியில் மற்ற தலைவர்களை மதிக்காத சில நிர்வாகிகளை நீக்க நயினார் திட்டமிட்டுள்ளார். மேலும், சாதி ரீதியாக அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் பதவிகளை வழங்கவும் அவர் முடிவு செய்துள்ளார். அதேபோல், முந்தைய தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்களையும் மாற்ற அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் ரவுடிகள் சிலர் கட்சியில் சேர்ந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி, அவர்களை நீக்கவும் நயினார் திட்டமிட்டுள்ளார். பாஜகவின் நீண்ட கால திட்டமான பூத் கமிட்டி அமைக்கும் பணி, அண்ணாமலை காலத்தில் முழுமையாக நடைபெறவில்லை. எனவே, 2026 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை வேகப்படுத்த நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளார். இதற்காக, கட்சியின் நிர்வாகிகள் குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் குழு விரைவில் மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்களை மே மாத இறுதிக்குள் முடிக்க நயினார் திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலையின் முட்டுக்கட்டை
நயினார் நாகேந்திரனின் இந்த திட்டங்களுக்கு அண்ணாமலை முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது. புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கான நயினார் அனுப்பிய பட்டியலை, டெல்லியில் உள்ள தனது செல்வாக்கை பயன்படுத்தி அண்ணாமலை தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், நயினார் எடுக்கும் பல முயற்சிகளுக்கு அண்ணாமலை மறைமுகமாக இடையூறு செய்வதாகக் கட்சிக்குள் பேச்சு எழுந்துள்ளது. அதோடு தனக்கு ஏற்ற சிலை களமிறக்கவும் அண்ணாமலை நினைக்கிறாராம். அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலர்களில் ஒருவராக வரலாம் என்ற தகவல் வரும் நிலையில்.. அண்ணாமலைக்கு டெல்லியிலும் மவுசு கூடி உள்ளதாம்.
நயினார் நாகேந்திரன், திமுகவை கடுமையாக விமர்சிப்பதில்லை என்றும், போராட்டங்களில் ஈடுபடுவதில்லை என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஆ. ராசா, அமித் ஷாவை விமர்சனம் செய்தபோது கூட நயினார் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. டெல்லி அழுத்தம் கொடுத்த பின்னரே அவர் போராட்டம் செய்ய முன்வந்ததாகக் கூறப்படுகிறது. நயினாரின் இந்த மென்மையான அணுகுமுறையை அண்ணாமலை நேரடியாக அமித் ஷாவிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், டெல்லி தரப்பும் நயினார் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட தலைவர் என்னவோ நயினார்தான்.. ஆனால் அவர் போட்டிருக்கும் டிரெஸ் அண்ணாமலையுடையது என்று சொல்லும் அளவிற்கு நிலைமை இருக்கிறதாம். இவ்வாறு, தமிழக பாஜகவில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டாலும், அண்ணாமலையின் செல்வாக்கு இன்னும் மேலோங்கி இருப்பதாகவும், இது கட்சிக்குள் சில சலசலப்புகளை ஏற்படுத்துவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications