சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடுத்ததே 5 தொகுதிகள்தான்.. அதையும் கோட்டை விட்டு வாஷ் அவுட்டான தமிழக பாஜக!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election Results 2019: தமிழகத்தில் வாஷ் அவுட்டான பாஜக!- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக கொடுத்ததே 5 தொகுதிகள்தான் அதிலும் 5 அவுட் ஆஃப் 5 வாங்கவிடாமல் வாஷ்அவுட் செய்துள்ளனர் வாக்காளர்கள்.

    தமிழகத்தில் பாஜக என்பது ஆரம்ப காலத்திலிருந்தே மக்களிடம் எடுபடாமல் இருந்தது. தமிழகம் மட்டுமில்லை, தென் தமிழகத்திலும் பாஜகவுக்கு இதே நிலைதான்.

    நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை , விவசாயக் கடன் தள்ளுபடி, மீனவர்கள் பிரச்சினை, ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்கள் என இத்தனை திட்டங்களை உள்ளே கொண்டு வந்து தமிழகத்தின் விரோதத்தை பாஜக சம்பாதித்துவிட்டது.

    மீண்டும் வெற்றி.. ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம்.. பிரதமர் மோடி! மீண்டும் வெற்றி.. ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம்.. பிரதமர் மோடி!

    மக்கள் கோபம்

    மக்கள் கோபம்

    இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய நீதி கட்சி, தமாகா, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்தன. இதனால் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மீது தமிழக மக்கள் கடுங்கோபத்தில் இருந்தனர்.

    முன்னிலை நிலவரம்

    முன்னிலை நிலவரம்

    அதை அப்படியே வாக்குகளாக காட்டி விட்டனர். இதன் விளைவு தமிழகம் மற்றும் புதவையில் மொத்தமுள்ல 40 மக்களவை தொகுதிகளில் (வேலூர் நீங்கலாக) திமுக 37 இடங்களிலும் அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

    முழு வெற்றி

    முழு வெற்றி

    விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட தாங்கள் கேட்டு வாங்கிய தொகுதிகளில் முழு வெற்றியை பிடிக்கும் நிலையில் உள்ளன. ஆனால் தேசிய கட்சி என மார்தட்டி கொள்ளும் பாஜகவோ ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்காத நிலையில் 5 தொகுதிகளிலும் மண்ணை கவ்வும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எத்தனை ஏளனம்

    எத்தனை ஏளனம்

    தமிழக பாஜக தலைவர்களான எச் ராஜா, தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக மக்களுக்கு துணை நிற்காமல் தங்கள் கட்சி எடுத்த முடிவுகளை பீற்றி கொண்டிருந்தனர். இதற்கெல்லாம் இன்று வைத்தனர் மக்கள் ஆப்பு.

    English summary
    BJP failed to win in one loksabha constituency out of 5 they contested in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X