சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர்னு சென்னையிலிருந்து பறந்த "ரிப்போர்ட்".. குருமூர்த்தி யாரை பற்றி என்ன சொன்னார்.. பரபர டெல்லி!

ஆடிட்டர் குருமூர்த்தி டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பினாராம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு ஒரு ரிப்போர்ட் பறந்துள்ளது.. இதை அனுப்பி வைத்துள்ளது துக்ளக் ஆசிரியர் குரூமூர்த்தி என்று ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

துக்ளக் பத்திரிகையின் வேலையை மட்டும் பார்க்காமல், அடிக்கடி பாஜகவை தூக்கி வைக்கும் வேலையையும் சேர்த்து பார்ப்பார் அதன் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி...

அப்படி பல காரியங்களை கடந்த காலங்களில் செயதுள்ளார்.. அதில் ஒன்று ரஜினி அரசியல்.. என்னென்னவோ, எப்படி எப்படியோ, ரஜினியிடம் பேசி பார்த்தும் , சொல்லி பார்த்தும், விளக்கி பார்த்தும் ஒன்றும் வேலைக்காகவில்லை.

"ரீ-பிளேஸ்".. கனிமொழி பற்றி ஸ்டாலினுக்கு பறந்த "ரிப்போர்ட்".. புதிய பதவி தர முடிவா? என்ன காரணம்

பாஜக

பாஜக

இப்போது தேர்தலே முடிந்துபோய்விட்டது.. தேர்தல் வரை ஒரு சத்தமும் காணோம்.. சிலசமயம், பாஜக-அதிமுக கூட்டணிக்கான முயற்சியை குருமூர்த்தி மேற்கொள்வார.. அதுவும் பாஜகவின் நலனுக்காகவே மேற்கொள்வார்.. கடந்த இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், கடந்த முறை எம்பி தேர்தலின்போது, அதிமுக தோல்வியை தழுவியது.. உடனே ஒரு ட்வீட் போட்டிருந்தார் குருமூர்த்தி..

 நவகிரகங்கள்

நவகிரகங்கள்

"தேர்தலில் அதிமுக ஏன் தோத்து போச்சு தெரியுமா?" என்று கேட்டு, வெளிப்படையான ஊழல் ஆட்சி, நவகிரகங்கள் போன்று ஒருவரை ஒருவர் பார்க்காத திசையற்ற தலைமை, பிரிந்த தலைவர்களால் தேர்தல் பணியில் குழம்பிய தொண்டர்கள், பணத்தின் மூலம் வெற்றி பெற்று விடலாம் என நினைத்தது போன்ற காரணங்களால்தான் அதிமுக தோற்றது" என்று ஓபனாகவே சொல்லி இருந்தார்.

 டெல்லி

டெல்லி

இப்போது மறுபடியும் ஒரு தகவல் குருமூர்த்தி பற்றி கசிந்து வருகிறது... இதுவும் அதிமுக - பாஜக கூட்டணி குறித்த தகவல் என்கிறார்கள். இப்போது சட்டசபை நடந்து முடிந்துள்ள நிலையில், டெல்லிக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பி வைத்துள்ளாராம் குருமூர்த்தி.. அதன்படி, அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொள்ளும்படியும், குறிப்பாக தினகரன், சசிகலாவை அதிமுகவுடன் இணைத்தால் கூடுதல் பலம் பெருகும் என்று தெரியப்படுத்தி உள்ளாராம்.

சேதாரம்

சேதாரம்

அப்படி பலம் பொருந்திய கட்சியாக அதிமுக உருவெடுக்கும்போது, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நம்பிக்கையுடன் கூட்டணி வைக்கலாம்.. பெருவாரியாக வெல்லலாம்.. அதிலும், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் ஏற்படக்கூடிய சேதாரத்தை இங்கிருந்தே நிவர்த்தியும் செய்யலாம் என்று அந்த ரிப்போர்ட்டில் தெரியப்படுத்தி உள்ளாராம்.

 அதிமுக

அதிமுக

சசிகலாவுடன் அதிமுகவுடன் சேருவதால், எந்த பயனும் இல்லை என்று கூறு ஒரு சமூகத்தினர் இன்னொரு ரிப்போர்ட்டை டெல்லி மேலிடத்துக்கு அனுப்பி வைத்ததாக சொல்லப்படும் நிலையில், குருமூர்த்தி அனுப்பி வைத்ததாக சொல்லப்படும் இந்த ரிப்போர்ட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.. ஒருவேளை குருமூர்த்தி இப்படி ஒரு ரிப்போர்ட்டை அனுப்பியது உண்மை என்றால், அதன்மூலம் பாஜகவுக்கு எந்த அளவுக்கு நன்மை கிடைக்குமா என்று உறுதியாக சொல்ல தெரியவில்லை.. ஆனால், அதிமுக தொண்டர்களுக்கு இது நல்ல விஷயமே.. கட்சி பலமானால் அது மேலும் ஊக்கம் தரக்கூடியதே.. பார்ப்போம்..!

English summary
BJP Gurumurthy sent a report to Delhi on AIADMK, Sources say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X