• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்

|
  திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்- வீடியோ

  சென்னை: வன்முறை அரசியலுக்கு வழிகாட்டும் திருமாவளவனிடமிருந்து அப்பாவி இளைஞர்களை காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்று தமிழிசை சவுந்தராஜனும், சரக்கு மிடுக்கு பேச்சிற்கு சொந்தக்காரரான திருமாவளவனுக்கு கண்டனம் என்று எச்.ராஜாவும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

  பொன்பரப்பி கிராமத்தில் பானை சின்னத்தை வரைந்த காரணத்தினால் தலித் மக்கள் தாக்கப்பட்டு அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டன. பாமகவின் தூண்டுதலால்தான் இத்தகைய வன்முறை நிகழ்த்தப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோருக்காக தாம் அரசியலை விட்டு விலகவும் தயார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று அறிவித்து மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளார். மறுபக்கம், திமுகதான் எல்லாவற்றையும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது என்று பாமக வக்கீல் பாலுவும் கூறியுள்ளார்.

  பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்

  கண்டனங்கள்

  கண்டனங்கள்

  இந்நிலையில், திருமாவளவன் கூறியிருந்த சில கருத்துக்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக பாஜக தரப்பில் இருந்து கண்டனங்கள் ஆரம்பித்துள்ளன. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பதிவிட்ட ஒரு ட்வீட்டில் உள்ளதாவது:

  திருப்பி அடி

  திருப்பி அடி

  "திருந்திபடி என்று சொல்லாமல் திருப்பி அடி என வன்முறை அரசியலுக்கு வழிகாட்டும் விசிக திருமாவிடம் இருந்து அப்பாவி இளைஞர்களை காப்பாற்ற வேண்டியது நம் கடமை. சட்டமன்ற/ பாராளுமன்ற உறுப்பினராக அடித்தட்டு மக்களுக்காக நீங்கள் கொண்டு வந்த ஒரு திட்டம் சொல்ல முடியுமா? பாஜக விமர்சனம் கண்டிக்கத்தக்கது" பதிவிட்டுள்ளார்.

  ஆர்எஸ்எஸ்

  ஆர்எஸ்எஸ்

  அதேபோல, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிவிட்ட ட்வீட்டில், "சரக்கு மிடுக்கு பேச்சிற்கு சொந்தக்காரரான திருமாவளவன் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பற்றி பேசியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு இவர் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆவார். சிதம்பரம் தொகுதியில் ஏற்பட்டுள்ள தோல்வி பயத்தால் சமூகப் பதட்டத்தை ஏற்படுத்துகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

  என்ன நியாயம்?

  ஆனால் தமிழிசைக்கும். எச்.ராஜாவுக்கும் ஏகப்பட்ட கண்டன கமெண்ட்கள் வந்து குவிகிறது. "அடிக்கிறது தப்பு இல்லையாம் நீ அடிச்சா திரும்ப அடிப்பேன்னு சொல்றது தான் தப்பாம்" என்று கேட்கிறார் ஒருவர்.

  திருந்தணுமா?

  "மிகக் கேவலமான பதிவு. ஆதிக்க சாதியினர் அடிப்பாங்களாம், ஒடுக்கப்பட்டோர் அடிவாங்கறது மட்டும் இல்லாம திருந்தி (!?) படிக்கணுமாம். இதுதான் உங்க கட்சி கொள்கையா!?" என்கிறார் மற்றொருவர்!

  உசுப்பேத்தும்போது உம்முன்னு இருந்தாலே பாதி பிரச்சினைகள் தீரும்.. சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  வட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
  தொகுதி அமைப்பு
  மக்கள் தொகை
  18,06,761
  மக்கள் தொகை
  • ஊரகம்
   0.00%
   ஊரகம்
  • நகர்ப்புறம்
   100.00%
   நகர்ப்புறம்
  • எஸ்சி
   19.49%
   எஸ்சி
  • எஸ்டி
   0.20%
   எஸ்டி

   
   
   
  English summary
  BJP State President Tamilisai Soundarajan, and H Raja has criticized VCK Thirumavalavan about his violence speech

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X

  Loksabha Results

  PartyLWT
  BJP+41041
  CONG+17017
  OTH808

  Arunachal Pradesh

  PartyLWT
  CONG000
  BJP000
  OTH000

  Sikkim

  PartyLWT
  SDF000
  SKM000
  OTH000

  Odisha

  PartyLWT
  BJD000
  CONG000
  OTH000

  Andhra Pradesh

  PartyLWT
  TDP101
  YSRCP101
  OTH000

  AWAITING

  Mandra Shivananda Reddy - TDP
  Nandyal
  AWAITING
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more