சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருமாவளவனின் "சரக்கு" மிடுக்கு.. "அண்ணன்" அம்பேத்கர்.. எச். ராஜாவின் சர்ச்சை டிவீட்!

திருமாவளவனுக்கு எச்.ராஜா கண்டனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருமாவளவனின் சரக்கு மிடுக்கு பேச்சே காரணம் - எச்.ராஜா- வீடியோ

    சென்னை: "சமூக நல்லிணக்கத்தை கெடுப்பது திருமாவளவனின் மிடுக்கு பேச்சுதான்... இது "அண்ணன் அம்பேத்கர்" பெயருக்கு களங்கம்" என எச்.ராஜா கூறியுள்ளார்.

    அம்பேத்கர் விழா ஒன்றில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் 'தமிழகத்தில் உள்ள சில குறிப்பிட்ட சமூக பெண்களை காதலிப்போம், கட்டிப்பிடிப்போம், திருமணம் செய்வோம் என கோஷமிடுகிறார்.

    அவர் கோஷமிட அதை அங்கிருந்த சில இளைஞர்களும் அந்த கோஷத்தை வழிமொழிகிறார்கள். இந்த வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    கட்டாயப்படுத்த கூடாது

    கட்டாயப்படுத்த கூடாது

    இந்த வீடியோவுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அக்கட்சியின் தமிழக மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன், கலப்பு திருமணம் என்பது கட்டாயப்படுத்தி வரக்கூடாது என்று தெரிவித்தார். அதேபோல, பாஜக தேசிய தலைவர் எச்.ராஜாவும் இதற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

    அண்ணன் அம்பேத்கர்

    தனது ட்விட்டர் பக்கத்தில், "இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு திருமாவளவன் போன்றோரின் சரக்கு மிடுக்கு பேச்சே காரணம். இம்மாதிரி போக்கு சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் என்று கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வந்துள்ளேன். இம்மாதிரி செயல்கள் அண்ணன் அம்பேத்கர் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்" என்று பதிவிட்டுள்ளார்.

    எப்போதிருந்து அண்ணன்?

    எப்போதிருந்து அண்ணன்?

    அது சரி, எச்.ராஜா தனது ட்வீட்டில் அண்ணல் அம்பேத்கர் என்பதற்கு பதிலாக அண்ணன் அம்பேத்கர் என்று சொல்லி இருக்கிறார். எல்லோருக்கும் அண்ணலான அம்பேத்கர் எப்போது எச்.ராஜாவுக்கு மட்டும் அண்ணன் ஆனார் என தெரியவில்லை.

    அட்மின் வேலையா?

    அட்மின் வேலையா?

    ஒருவேளை பெரியார் போலவே அம்பேத்கர் மீதும் எச்.ராஜாவுக்கு அலாதி பிரியமா அல்லது அண்ணன் அம்பேத்கர் என்று ராஜாவுக்கே தெரியாமல் வழக்கம்போல் அட்மின் போட்டுவிட்டாரா என்பதுதான் புரியவில்லை. தப்பே இல்லாமல் ஒரு டிவீட்டாவது போட்டால் நல்லாதான் இருக்கும்.. பார்ப்போம்!

    English summary
    H.Raja condemned for caste domination group and slams Thirumavalan on his twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X