சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

40 தொகுதிகளிலும் மோடியே வேட்பாளர்.. எழுத்து பிழையுடன் ஹெச். ராஜாவின் டுவிட்டர் செய்தி

Google Oneindia Tamil News

Recommended Video

    எழுத்து பிழையுடன் ஹெச். ராஜாவின் டுவிட்டர் செய்தி- வீடியோ

    சென்னை:தமிழகத்தில் பாஜகவை பொருத்தவரை 40 தொகுதிகளிலும் மோடிஜியே வேட்பாளர் என்று கருதி கடுமையாக உழைத்திடுவோம் என்று எழுத்து பிழையுடன் ஹெச் ராஜா டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளார்.

    லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தேமுதிக இணைவதில் இழுபறி நீடிக்கிறது.

    அதே நேரத்தில், லோக்சபா தேர்தலை தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து சந்திக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன.

    தொடரும் பேச்சுவார்த்தை

    தொடரும் பேச்சுவார்த்தை

    காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டிய தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன், திமுக எம்.பி. கனிமொழி பேச்சுவார்த்தை நடத்தினர். இந் நிலையில் பாஜக, பாமக, அதிமுக கூட்டணி, மோடியை மீண்டும் பிரதமராக்கும் பலமான கூட்டணி என்று தமிழக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

    டுவிட்டர் பதவி

    இதுதொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் மத்தியில் நிலையான ஆட்சியையும் மோடிஜி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வலிமையான கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பாஜகவைப் பொருத்தவரை 40 தொகுதிகளிலும் மோடிஜியே வேட்பாளர் எனக்கருதி கடுமையாக உழைத்திடுவோம். தீயசக்தி திமுகவிற்கு பாடம் புகட்டும் நேரமாவது என்று குறிப்பிட்டுள்ளார்.

    திமுகவை விமர்சித்த ராஜா

    திமுகவை விமர்சித்த ராஜா

    அந்த பதிவில் வழக்கம் போல் திமுகவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். தீயசக்தி திமுக என்று எழுத்துபிழையின்றி எழுதியுள்ள ஹெச் ராஜா... மோடிஜியே வேட்பாளர் என்பதற்கு பதிலாக வேட்டாளர் என்று பிழையுடன் பதிவிட்டுள்ளார்.

    ராஜா மீது அதிருப்தி

    ராஜா மீது அதிருப்தி

    பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா வரும் தேர்தலில் சிவகங்கை அல்லது மத்திய சென்னைத் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதிமுக அதற்கு அதிருப்தி தெரிவித்த நிலையில் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும், பாஜக தலைமை அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவி தருவதாக வாக்குறுதி கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடுமையான விமர்சனம்

    கடுமையான விமர்சனம்

    பல கட்டங்களில் பிரதமர் மோடி தமிழகம் வரும் போது பொதுக்கூட்டங்களில் பேசுவதை ஹெச்.ராஜா தான் தமிழில் மொழிபெயர்ப்பார். அப்போதே சிறுநீர் பாசனம் என்று ஒரு முறை கூறி சர்ச்சையில் சிக்கி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

    English summary
    H Raja has expressed confidence that he will work for Modi in the 40 constituencies in the tamilnadu and puducherry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X