சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி போட்ட போடு.. பாஜக கப்சிப்.. ஒருத்தரும் கருத்து சொல்லலையே.. ஏன் இந்த மயான அமைதி?!

நடிகர் ரஜினிகாந்த் பேட்டிக்கு பாஜக கருத்து சொல்லாமல் உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி என்ற பிம்பத்தை வைத்து.. அடித்து ஆடி கொண்டிருக்கும் பாஜக தரப்பு நேற்றிரவில் இருந்து மயான அமைதியை கடைப்பிடித்து வருகிறது.. "சிஏஏ பற்றி ரஜினி கரெக்டாதான் பேசினாரு.. அவருக்கு என் வாழ்த்துக்கள்" என்று பாராட்டிய எச்.ராஜா உட்பட யாருமே ரஜினிகாந்த் அளித்த நேற்றைய பேட்டி குறித்து வாய் திறக்காமல் உள்ளது ஆச்சரியத்தை தருவதாக உள்ளது.

Recommended Video

    டெல்லி கலவரம்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்

    பாஜகவுக்கு ஆதரவான அதே சமயம் திராவிட எதிர்ப்பு கருத்துகளை டைம் கிடைக்கும்போதெல்லாம் எடுத்து அள்ளி விட்டு கொண்டிருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

    பாஜக முரண்பட்ட ஒரு விஷயத்தை சொன்னாலும், இதற்கு ரஜினி தரப்பில் தரப்படும் கமெண்ட்கள்தான் ட்ரெண்டிங்காகி விடும்.. அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும்.

    இதை சொல்வதால் உடனே என்னை பாஜக ஆள் என்று சொல்லாதீங்க.. ரஜினி வேதனை இதை சொல்வதால் உடனே என்னை பாஜக ஆள் என்று சொல்லாதீங்க.. ரஜினி வேதனை

    பணமதிப்பிழப்பு

    பணமதிப்பிழப்பு

    இதற்கு உதாரணங்கள்தான் ஆன்மீக அரசியல் ஆகட்டும்.. போர் வந்தால் களமிறங்குவோம் என்று சொன்னதாகட்டும்.. பணமதிப்பு விவகாரத்தில் முதல் ஆளாக வரவேற்று ட்வீட் போட்டதாகட்டும்.. தூத்துக்குடி பேட்டி ஆகட்டும்... ராமர், லட்சுமணன் என்று புகழ்ந்ததாகட்டும்.. சிஏஏ-வால் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது என்ற உறுதியாகட்டும்... எல்லாமே பாஜக + அதிமுகவுக்கு ஊதுகுழலாக எடுத்து ஊதிய விஷயங்கள்தான்!

    எதிர்ப்புகள்

    எதிர்ப்புகள்

    ஆனால் இதற்காக தமிழக மக்கள் வெளிப்படுத்தும் விளைவுகளையும் உடனுக்குடன் அறுவடை செய்தே வருகிறார் ரஜினிகாந்த்.. ஏராளமான போலீஸ் ஸ்டேஷன்களில் அவர் மீது திராவிடர் கழகம் உள்ளிட்ட பலரும் புகாரும் தந்துள்ளனர்.. இருந்தாலும் பாஜக தரப்போ தொடர்ந்து எரியும் எண்ணெய்யில் நெய் வார்த்து ரஜினிக்கு கொம்பு சீவி விட்டே வருகின்றனர்.

    கரெக்ட்

    கரெக்ட்

    இதில் முக்கியமானவர்கள் எச்.ராஜா, சுப்பிரமணியசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி, அர்ஜுன் சம்பத் போன்றவர்கள்தான்.. "இதுல என்ன குடி முழுகி போச்சு.. நாடு பூராவும் போராட்டம்ங்கிறது எள்ளு முனையளவு கூட நியாயம் இல்லை.. அநாவசியமானது.. ரஜினி கரெக்ட்டாதான் பேசியிருக்கிறார்.. அவருக்கு என் வாழ்த்துக்கள்" என்று சிஏஏ குறித்த கருத்துக்கு சப்போர்ட் செய்தார் எச்.ராஜா.. துக்ளக் விவகாரத்தில்கூட, திமுகவை தாக்கி, அதன்மூலம் ரஜினியின் கருத்துக்கு முட்டு கொடுத்திருந்தார் எச்.ராஜா!

    சத்தமே காணோம்

    சத்தமே காணோம்

    ஆனால், நேற்று மத்திய அரசுக்கு எதிராக பகிரங்கமாகவே தன் கருத்தை பதிவு செய்தார் ரஜினிகாந்த்.. போராட்டத்தை சாடுகிறார் என்றாலும், திஸ் இஸ் டூ மச் என்று குறை சொன்னது பாஜக தரப்புக்கு கொஞ்சம் ஷாக் -ஆக தான் இருக்கும்.. மேலும், மத்திய அரசை எதிர்த்ததற்கு ஓடோடி வந்து முதல் ஆளாக ரஜினிக்கு வாழ்த்துக்களை நண்பர் கமல்ஹாசன் தெரிவிக்கவும் பாஜக தரப்பு சத்தத்தையே காணோம்! ஏன் என்று தெரியவில்லை. ரஜினியின் ஆலோசர்கள், விமர்சகர்களையும் காணோம்.. இதுவரை எந்த கருத்தும் பதிவு செய்யவில்லை.

    பதிலடி

    பதிலடி

    முன்பெல்லாம் தமிழிசை தலைவராக இருந்த சமயத்தில், எதிர்ப்பு ஆதரவு என எதுவாக இருந்தாலும் உடனே பதில் அளிப்பார். ஆதரவு என்றால் அதற்கேற்ப பதில் இருக்கும். விமர்சனம் என்றால் ஓடி வந்து முதல் ஆளாக பதிலடி கொடுப்பார். அவரது பதில்கள் எந்த சமயத்திலும் தாமதமானதே கிடையாது. எந்த சூழலாக இருந்தாலும் உடனே அதிரடியான பதிலை கொட்டி விட்டுப் போவார். ஆனால் தற்போது பாஜகவுக்கு தலைவர் என்று யாரும் இல்லாததால் பதிலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வரவில்லை.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    ஆனால் ரஜினியின் குற்றச்சாட்டு மிகப் பெரியது.. உள்துறை தோல்வி என்று கூறியுள்ளார். .. அடக்க முடியாட்டி ரிசைன் பண்ணிடுங்க என்றும் பச்சையாகவே கூறியிருக்கிறார். இது அமித்ஷாவை நேரடியாகவே தாக்கிய வார்த்தைகள்.. .இதற்கு பாஜக தரப்பு ஸ்டிராங்காக பதிலளித்திருக்க வேண்டும். ஆனால் அளிக்காமல் இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

    அசைன்மென்ட்

    அசைன்மென்ட்

    திமுக உயர்த்தி பிடிக்கும் பெரியாரிய கொள்கைகளையும்... திராவிட இயக்க செயல்பாடுகளையும் விமர்சித்து, கேள்வி எழுப்புவதுதான் ரஜினிக்கு இதுவரை தரப்பட்டிருந்த அசைன்மெண்ட்.. அப்படியானால் இதற்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதா? ரஜினி தங்கள் கைமீறி சென்றுவிட்டதாக முடிவுக்கு வந்துவிட்டார்களா, அல்லது ரஜினி யார் பெயரையும் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டாததால் இது மேலோட்டமான பேட்டி என்று மட்டுமே எடுத்து கொண்டுள்ளார்களா தெரியவில்லை.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    ஒருவேளை ரஜினி உண்மையிலேயே மத்திய அரசுக்கு எதிராக திரும்பினால், கண்டிப்பாக அடுத்த விஜய் ரஜினியாகத்தான் இருப்பார்!.. ஆனால் ரஜினி கடைசி வரை ரஜினியாகவேதான் இருப்பார் என்ற நம்பிக்கை பாஜக தரப்பில் இன்னும் கூட இருப்பதாக கூறப்படுகிறது!

    English summary
    actor rajinikanth says about delhi caa protest and strongly condemns central gov
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X