சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதுக்கு டெல்லியில் டேரா போடணும்.. டோஸ் வாங்கணும்.. ஜெ. வளர்த்த பிள்ளைகளின் பரிதாப நிலை!

தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்று அதிமுகவிடம் பாஜக கேள்வி எழுப்பி உள்ளதாம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi cabinet ministry | வைத்திலிங்கம், ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் பதவி இல்லை

    சென்னை: எதுக்கு கூட்டணி வைக்கணும்? இப்போ எதுக்கு சீட்டுக்காக டெல்லியிலேயே டேரா போடணும்? எதுக்கு பாஜக கிட்ட வாங்கி கட்டிக்கணும்? இதெல்லாம் அதிமுகவுக்கு தேவைதானா? என்று தொண்டர்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

    அம்மாவின் ஆட்சி இது என்று சொல்லி கொள்வதானால், ஜெயலலிதா சொன்ன வார்த்தையிலேயே நின்று காட்டியிருக்க வேண்டும் . அதைவிட்டு விட்டு பாஜகவிடம் கூட்டணி வைக்க நேர்ந்துவிட்டது. அதன்பிறகு இது எப்படி அம்மாவின் ஆட்சியில் தமிழகம் செல்கிறது என்று எடுத்து கொள்வது?

    போட்டியிட்ட இடங்களில் ஒன்றை தவிர எல்லா இடங்களிலும் தோற்றாகிவிட்டது. இது ஏன்? முதல் காரணம் முரண்பட்ட கூட்டணி மக்களிடம் கொஞ்சம்கூட ஒட்டவே இல்லை. இது பெரிய மைனஸ்!

     சக்ஸஸ்.. சக்ஸஸ்.. எஸ்.வி.சேகர் ரொம்ப நாளா தேடிட்டிருந்த வீடியோ சிக்கி விட்டதாம்! சக்ஸஸ்.. சக்ஸஸ்.. எஸ்.வி.சேகர் ரொம்ப நாளா தேடிட்டிருந்த வீடியோ சிக்கி விட்டதாம்!

    ஒத்துழைப்பு

    ஒத்துழைப்பு

    பிறகு, பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் அதிமுக அதிதீவிரமாக இறங்கி வேலை பார்த்ததா என தெரியவில்லை. பிரச்சாரம் ஆகட்டும், களப்பணி ஆகட்டும்.. கூட்டணி ஒத்துழைப்பு என்பது எந்த அளவுக்கு பாஜகவுக்கு கிடைத்திருக்கும் என்பது யூகிக்க முடியவில்லை.

    முயற்சிகள்

    முயற்சிகள்

    அடுத்ததாக, எடப்பாடி தரப்பு தமிழகத்தில் ஆட்சியை தக்க வைக்கதான் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. எம்பி தேர்தலைவிட சட்டமன்றத் தேர்தலிலேயே கவனம் செலுத்தியது. இது திமுக, அமமுக மேல் ஏற்பட்ட பயம்தான் காரணம். எங்கே உள்ளதுக்கே நிலைமை மோசமாகிவிடுமோ என்று சட்டமன்ற, இடைத்தேர்தலில் மொத்த கவனத்தையும் செலுத்தியது.

    மத்திய அமைச்சர் பதவி

    மத்திய அமைச்சர் பதவி

    அதன்படியே ஆட்சியை தக்க வைத்து கொண்டாலும், இப்போது டெல்லியில் தமிழகத்துக்கான அங்கீகாரமே இல்லாத மாதிரி மத்திய அமைச்சரவை உள்ளது. ராஜ்ய சபா சீட்டுக்காகவும் பாஜகவிடம் மன்றாடும் நிலை உள்ளது. இதற்கு பேசாமல், 5 தொகுதிகளில் ஒரு இடத்திலாவது பாஜகவை எப்படியாவது பெற்றி பெறவைத்திருக்கலாம். அல்லது வேட்பாளர் தேர்வையாவது சரியாக செய்திருக்கலாம். குறிப்பாக சர்ச்சைக்குரியவர்களுக்கு சீட் தராமல், பாஜகவிலேயே வேறு பலம் பொருந்திய வேறு நபர்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம்.

    எச்.ராஜா

    எச்.ராஜா

    கூட்டணி ஒப்பந்தத்தின்போது, எச்.ராஜா வரவே கூடாது என்று அதிமுக கண்டிஷன் போட்டதாக தகவல் வந்தது. ஒருவேளை இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், சிவகங்கை வேட்பாளராக எச்.ராஜா வேண்டாம் என்றே கூட்டணியிடம் உரிமையாக சொல்லி இருக்கலாம்.

    தொகுதி

    தொகுதி

    அல்லது தமிழிசை சவுந்தராஜன் விரும்பி கேட்ட தொகுதியையாவது தந்திருக்கலாம். திருப்பூர் தொகுதி தமிழிசைக்கு மிகவும் பிடித்தமான தொகுதி. இங்குதான் இவருடைய குல தெய்வம் கோயிலும் உள்ளது. ஆனால் அதிமுக மறுத்துவிட்டதாக தகவல் வந்தது. அதேபோல, தென்சென்னையில் நிற்கலாம் என்று தமிழிசை விரும்பினார். அதற்காக தங்களுக்காக ஒதுக்கிய வடசென்னைக்கு பதிலாக தென்சென்னை வேண்டும் என்று கேட்டார். தென் சென்னையை பொறுத்தவரை பாஜகவுக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும். ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் போட்டியிட போவதாக சொல்லி அந்த இடத்தையும் தரவில்லை.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி

    கடைசியில் தோற்கதான் போகிறார் என்று தெரிந்தும் கனிமொழிக்கு எதிராக தூத்துக்குடியில் கொண்டு போய் நிறுத்தியது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் பாஜக -அதிமுக மீதான எல்லா கல்லடிகளும் தமிழிசை மீதுதான் விழுந்தது. கடைசியில் தோற்றே போனார்.

    பியூஷ்கோயல்

    பியூஷ்கோயல்

    இது போன்ற தவறுகளை எல்லாம் அதிமுக தவிர்த்திருக்கலாம். இதில் இன்னொரு முக்கியமான விஷயம், ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி தரக்கூடாது என்று சொல்வதற்காக அந்த இரண்டு தமிழக அமைச்சர்கள் பியூஷ்கோயலை போய் பார்த்தார்களாம். அப்போது காச் மூச்சென்று சத்தம் போட்டுவிட்டாராம் பியூஷ்கோயல். "உங்க கூட கூட்டணி வெச்சுதான் 5 இடமும் போச்சு. தனியா நின்றிருந்தாலாவது எங்கயாவது ஜெயிச்சிருப்போம்" என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டாராம்.

    ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகளின் கதியைப் பார்த்தால் பாவமாத்தான் இருக்கு!

    English summary
    RailWay Minister Piyush Goyal said that, if we were contesting alone, we would have won in Tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X