சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரமாக களமிறங்கிய பாஜக.. தமிழகம் முழுக்க திரண்ட கட்சியினர்.. சிஏஏவிற்கு ஆதரவாக மாபெரும் பேரணி!

சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுக்க பாஜக கட்சி சார்பாக பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுக்க பாஜக கட்சி சார்பாக பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு பின் நாடு முழுக்க போர்க்களமாக மாறியுள்ளது. இந்த சட்டத்தை எதிரித்து டெல்லி, வண்ணாரப்பேட்டை தொடங்கி நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் சார்பாக நாடு முழுக்க பல்வேறு பகுதிகளில் பேரணி நடைபெற்று வருகிறது. டெல்லியில் சிஏஏ ஆதரவு போராட்டம்தான் கலவரத்தில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியை போன்று தமிழகத்திலும்.. திமுகவை குறிப்பிட்டு விமர்சித்து பகீர் கிளப்பிய பாஜக துணை தலைவர் டெல்லியை போன்று தமிழகத்திலும்.. திமுகவை குறிப்பிட்டு விமர்சித்து பகீர் கிளப்பிய பாஜக துணை தலைவர்

தமிழகம்

தமிழகம்

சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுக்க பாஜக கட்சி சார்பாக பேரணி நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் காலையில் சிஏஏவிற்கு ஆதரவாக முதலில் தேனியில் போராட்டம் தொடங்கியது. முதலில் இங்குதான் போராட்டம் நடந்தது. அதன்பின் திருப்பூரில் போராட்டம் நடந்தது. திருப்பூரில் மிகப்பெரிய அளவில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு நடந்த போராட்டத்தில் 500 க்கும் அதிகமான பாஜகவினர் போராட்டம் செய்தனர். காலையில் 10 -12 மணி வரை இந்த போராட்டம் நடந்தது.

எங்கு

எங்கு

இதையடுத்து தற்போது தமிழகத்தின் மற்ற பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. கடலூரில் ஆட்சியர் அலுவலகம் முன் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. அங்கு 200க்கும் அதிகமான பாஜகவினர் கூடி போராட்டம் செய்து வருகிறார்கள். மேலும் தஞ்சையிலும் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. அங்கு 400 பாஜகவினர் ஒட்டுமொத்தமாக கூடி போராட்டம் செய்து வருகிறார்கள்.

நெல்லை போராட்டம்

நெல்லை போராட்டம்

அதேபோல் நெல்லையிலும் சிஏஏ ஆதரவு பேரணி மற்றும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மாலை 3 மணிக்கு தொடங்கிய பேரணி தற்போது வரை நடந்து வருகிறது. இதில் முக்கியமான பாஜக தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் கிருஷ்ணகிரியிலும் சிஏஏ ஆதரவு போராட்டங்கள் நடந்து வருகிறது. சேலத்தில் சில இடத்தில பாஜக பேரணி நடக்கிறது. டெல்டாவில் திருவாவூர், நாகையில் சில இடங்களில் சிஏஏ ஆதரவு பேரணி நடந்து வருகிறது.

இந்து அமைப்பு

இந்து அமைப்பு

இந்து அமைப்பினர் பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆம் பாஜகவினர் மட்டும் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்து மகா சபா , ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர். விஷ்வ ஹந்து பரிசித் அமைப்பை சேர்ந்தவர் களும் இதில் கலந்து கொட்டினார். இதனால் தமிழகம் முழுக்க போராட்டம் நடக்கும் இடங்களில் எல்லாம் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English summary
BJP helds a mass protest supporting CAA all over Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X