சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கும் பாஜக அழைப்பு விடுத்தது.. நிறைய செய்வதாக பேசினார்கள்.. பாரதிராஜா பரபரப்பு தகவல்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    The Unknown show with Anandhan Irfath | பக்காவாக ட்யூனாகி விட்ட ரஜினிகாந்த்

    சென்னை: பாஜகவில் இணைய தம்மிடம் பேசினார்கள்.. நிறைய செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர் என இயக்குநர் பாரதிராஜா பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு பல்வேறு பிரபலங்களை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது. திரைத்துறை பிரபலங்களை இழுப்பதை தொடர் நடவடிக்கையாக பாஜக மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாரதிராஜா கூறியதாவது:

    தமிழகத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர். ஆனால் கர்நாடகா, கேரளாவில் அந்த மண்ணின் மக்கள்தான் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். தமிழகத்தில் தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் நிச்சயம் ஜெயித்துவிடலாம்.

    பாரதிராஜா இயக்கத்தில் நடித்த ரஜினி... பாஜக இயக்கத்தில் நடிக்கிறார்... அன்சாரி சாடல் பாரதிராஜா இயக்கத்தில் நடித்த ரஜினி... பாஜக இயக்கத்தில் நடிக்கிறார்... அன்சாரி சாடல்

    கை நீட்ட சொல்லும் அரசியல்

    கை நீட்ட சொல்லும் அரசியல்

    ஆனால் தமிழர்கள் ஒன்று சேரும் போது யார் தலைவர் என நினைக்கிறார்கள்.. அதேபோல் எல்லோரும் முன்னால் நிற்க வேண்டும் என விரும்புகின்றனர். பாதரசம் போல் இருக்கும் தமிழர்களை ஒன்று சேர்ப்பதும் கஷ்டமான ஒன்று. நான் இதுவரை அரசியல் கட்சி தொடங்கலாம் என நினைத்தது இல்லை. ஏனெனில் அரசியல் என்றாலே கை நீட்டத்தான் வேண்டும்.

    அதிகாரம், அரசியல்

    அதிகாரம், அரசியல்

    இதுவரை நல்ல கலைஞனாக இருந்துவிட்டேன். போகும் போது நல்ல கலைஞன் போகிறான் என சொல்ல வேண்டும். கரப்டெட் போகிறான் என சொல்லக் கூடாது. அதிகாரங்கள் நம்மை அச்சுறுத்தும் போது நமக்கு இயல்பாகவே கோபம் வரும்.. அதனால்தா ஏன் அந்த அதிகாரத்தைக் கையில் எடுக்கக் கூடாது என சிந்திக்கிறார்கள்.

    அரசியலுக்கு வரமாட்டேன்

    அரசியலுக்கு வரமாட்டேன்

    என்னைப் பொறுத்தவரை கோழியாகத்தான் இருப்பேன். கோழி கூவத்தான் செய்யும்... குச்சி அடித்து கொத்தி கொத்தி ஒவ்வொருவரையாக வீட்டுக்குள் நுழைந்து எழுப்பாது. அதேபோல் கூரை மேல் நின்று மட்டும் கூவ மட்டும் நான் செய்வேன். அரசியலுக்கு நிச்சயம் வரவேமாட்டேன்.

    பாஜகவுக்கு அழைப்பு

    பாஜகவுக்கு அழைப்பு

    எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா அனைவருமே என்னை அரசியலுக்கு அழைத்தார்கள். ஆனால் அதை ஏற்கவில்லை. ஏன் 6 மாதத்துக்கு முன்னர் கூட மத்தியில் இருந்து பெரிய அளவில் பேசினார்கள். அதை செய்கிறோம்.. இதை செய்து கொடுக்கிறோம் என்றார்கள். எனக்கு இருக்கிற கடன்பிரச்சனைக்கு ரொம்ப பிரமாதம்னுகூட யோசிச்சேன். ஆனால் ஏற்கவில்லை. முடியாது என்று சொன்னேன்.. எழுந்து போய்விட்டார்கள்.

    இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

    English summary
    Veteran Director Bharathiraja said that BJP also invited him to join party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X