• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"5 தாமரைகள்".. 10 தொகுதிகள்.. "டெல்லி" போட்ட பிளான்.. கடைசி நாட்களிலும் விடாத "மலர்" போராட்டம்..!

|

சென்னை: தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. இந்த சூழலில், கடைசியாக தேர்தலுக்கு முன்புவரை வரை கூட பாஜக மேற்கொண்ட அதிரடிகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த எம்பி தேர்தலில், இந்த அளவுக்கு திமுக அபார வெற்றி பெறும் என்று பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..

அதனால்தான், "என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது, இந்த முறையாவது தாமரை தமிழகத்தில் மலர்ந்தாக வேண்டும்" என்று பாஜக மேலிடம், மெசேஜ்களை தமிழகத்துக்கு பாஸ் செய்து கொண்டே இருந்திருக்கிறது.

அமித்ஷா

அமித்ஷா

அதேபோல, இந்த 6 மாதமாகவே, திமுகவை டேமேஜ் செய்ய வைக்கும் அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வந்தது. இந்த லிஸ்ட்டில் அதிமுகவையும் சேர்த்து கொள்ளலாம்.. திராவிட கட்சிகளுக்கு செக் வைப்பதே, பாஜகவின் அடித்தளமாக இருந்து வருவதால்தான், கூட்டணியில் முதல்வர் வேட்பாளரைகூட லேசில் ஒப்புக் கொள்ளப்படாமல் இழுத்தடிப்பு இருந்தது.

பாஜக

பாஜக

இந்நிலையில் தேர்தலும் முடிந்துவிட்டது.. ஆனால், தேர்தலுக்கு முன்பு கடைசி 4 நாட்கள் பாஜக பல்வேறு நடவடிக்கைகளையும், அதிரடிகளையும் தமிழகத்தில் எடுத்துள்ளதாகவும் அதற்காக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும், சில உறுதிப்படுத்ததப்படாத தகவல்களும் கசிந்து வருகின்றன.

 பிரதமர்

பிரதமர்

தமிழகத்துக்கு எப்போதெல்லாம் பிரதமர் மோடி வருகை தருகிறாரோ அப்போதெல்லாம், தமிழகத்தில் களநிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.. அப்படித்தான் கடைசியாக வருகை தந்த போதும் எடப்பாடியாரை நேரடியாகவே கேட்டுள்ளார்.. அதற்கு முதல்வர் தரப்பு, "களப்பணி நன்றாக செய்துள்ளோம், ஆனால், வந்து கொண்டிருக்கும் கருத்து கணிப்புகள்தான் கவலை தருகின்றன" என்று சொன்னாராம்.

அமித்ஷா

அமித்ஷா

இதை கேட்டு கொண்ட மோடி, டெல்லி சென்றபிறகும், தமிழக நிலவரம் குறித்து விசாரித்தபடியே இருந்திருக்கிறார்.. 20 தொகுதிகளில் ஒன்றில்கூட பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்ற ரிப்போர்ட் கையில் கிடைத்ததுமே சற்று அப்செட் ஆகியுள்ளார்.. இதையடுத்தே டெல்லி தலைமை ஒன்றுகூடி விவாதித்ததாம்.. தமிழக நிலவரங்கள் வந்த ரிப்போர்ட்களின் அடிப்படையில் இந்த ஆலோசனைகள் நடந்ததாகவும் சொல்கிறார்கள்.

தாமரை

தாமரை

ஆலோசனை முடிவில், "தமிழகத்தில் தாமரை மலர வேண்டும், இந்த முறை 20 தொகுதிகளில் 10 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெற வேண்டும், அதற்கு என்ன வழி? அதிலும் ஸ்டார் 5 வேட்பாளர்களான அதாவது, எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், குஷ்பு, பொன்ராதா போன்றோர் வெற்றி பெற வேண்டும், அதற்கான களப்பணியில் ஈடுபட வேண்டும் என்று கறாராக முடிவெடுக்கவும்தான், இதையடுத்தே இந்த 5 தொகுதிகளிலும் வடமாநில தலைவர்களின் வருகையும், பிரச்சாரமும் சூடுபிடித்ததாக சொல்கிறார்கள்.

 வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு

அதேபோல இன்னொரு தகவலும் வெளிவந்துள்ளது.. வாக்குப்பதிவுக்கு நான்கைந்து நாட்களே உள்ள நிலையில், திமுகவை பற்றின ஒரு தகவல் பாஜக மேலிடத்துக்கு சென்றுள்ளது. அதாவது, தொழிலதிபர்களிடம் தேர்தல் நிதியை திமுக தரப்பில் வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் , அதை சபரீசன்தான் கையாள்கிறார் என்றும் சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களே பாஜக மேலிடத்துக்கு தகவல் சொன்னார்களாம்.. இதையடுத்தே, திமுக தரப்பில் அந்த கெடுபிடிகள் கடைசி நாட்களில் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், இந்த ரெய்டு திமுகவுக்கே படுசாதகமாகி போய்விடும் என்று பாஜக எதிர்பார்க்கவில்லையாம்.

 வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு

இப்படி தேர்தலுக்கு கடைசி நாட்களில்கூட, பாஜக எடுத்து கொண்ட சீரிய முயற்சிகளும், பட்ட பாடுகளும் அளப்பரியதாக இருக்கிறது.. இதன் பலன் எப்படி இருக்க போகிறது என்பதும், திராவிட மண் "மலர்" மாறுமா? அந்த 5 தாமரைகள் மலர்வார்களா? என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!

 
 
 
English summary
BJP is making various efforts to gain strength in Tamil Nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X