சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெர்க்.. வேற "மேட்டரை" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு

பாஜக, மம்தாவின் பிளான்களை சிதறடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: வேகமாக முந்தி கொண்டுள்ளது பாஜக மேலிடம்.. எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர விடாமல், அவர்களை பலவீனப்படுத்தும் முயற்சியாக, மற்றொரு அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது.. என்ன அது?

நாட்டில் தொற்று பரவல் குறைந்து வரும்நிலையில், அரசியல் பக்கம் கவனத்தை செலுத்தி வருகின்றனர் தேசிய தலைவர்கள்.. ஒரு முக்கியமான விஷயத்தை தேசிய தலைவர்கள் ரொம்ப லேட்டாக உணர்ந்துள்ளனர்.

கடந்த எம்பி தேர்தலின்போது ஒன்றிணைந்து செயல்படாததுதான், பாஜக வெற்றிக்கு காரணம் என்பதை காலங்கடந்து வருத்தப்பட்டுள்ளனர்.

கடற்கரையில் 2 சிறுமிகள் பலாத்காரம்.. அவர்கள் ஏன் இரவில் அங்கு தங்கினர்.. பாஜக முதல்வர் சர்ச்சை பேச்சு கடற்கரையில் 2 சிறுமிகள் பலாத்காரம்.. அவர்கள் ஏன் இரவில் அங்கு தங்கினர்.. பாஜக முதல்வர் சர்ச்சை பேச்சு

 எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

குறிப்பாக உபி முதல் ஆந்திரா, கேரளா வரை பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் நிற்கவில்லை... வாக்குகள் சிதறிவிட்டது.. பாஜக மேலே வந்துவிட்டது. அதற்காகத்தான், இப்போதிருந்து அணி திரள ஒன்று கூடி வருகின்றனர்.. அதற்கான முயற்சிகள் தேசிய அரசியலில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பிள்ளையார் சுழியை சரத்பவார் போட்டுள்ளார்.. அடுத்து மம்தா இறங்கி உள்ளார். பாஜகவுக்கு எதிராக கூட்டணியை கட்டமைக்கும் முயற்சிகளையும் எடுத்துள்ளார். அதற்காக தலைவர்களையும் சந்தித்துள்ளார்.

 மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

மம்தா இந்த அளவுக்கு களமிறங்க காரணம், சென்றமுறையே வங்கத்தை கைப்பற்ற வேண்டும் என்று மோடி முதல் அமித்ஷா வரை கடுமையான திட்டங்களை கையில் எடுத்தனர்.. டெல்லிக்கும் கல்கத்தாவுக்கும் பறந்து பறந்து சென்றார்கள்.. திரிணாமுல் தரப்பின் சில புள்ளிகளையே விலைக்கும் வாங்கினார்கள்.. எத்தனையோ வழிகளில் மம்தாவுக்கு நெருக்கடி தந்தார்கள். மம்தாவை பலவீனமான தலைவராக்க பலவித முயற்சிகளை கட்டவிழ்த்துவிட்டார்கள். ஆனால், பெண் சிங்கம், ஒற்றை நபராக அனைவரையும் விரட்டி அடித்துவிட்டார்.

 மாநில கட்சிகள்

மாநில கட்சிகள்

இந்த முறையும் பாஜக மேற்கு வங்கத்தை விடாது என்பதால், அதற்கு முன்பே மம்தா அதிரடியில் குதித்துள்ளார்.. குறிப்பாக பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனி மாநில கட்சிகளே இல்லாத சூழல் உருவாகும் என்ற அபாயத்தை மம்தாவும் உணர்ந்துவிட்டார்.. ராகுலும் உணர்ந்துவிட்டார்.. ஸ்டாலினும் உணர்ந்துவிட்டார்.. பினராயும் உணர்ந்துவிட்டார்.. சரத்பவாரும் உணர்ந்துவிட்டார்.. இவர்களை இணைக்கும் முக்கிய புள்ளியாகவும், அச்சாணியாகவும் பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு வருகிறார்.

சரத்பவார்

சரத்பவார்

ஆனால், தங்களுக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாவதை பாஜக எந்தவிதத்திலும் விரும்பவில்லை.. அதை ஏற்று கொள்ளவும் முடியவில்லை... சரத்பவாரும், பிகேவும் சந்தித்தபோதுகூட பாஜக இப்படி கலங்கவில்லை.. மம்தா டெல்லியில் காலை வைத்ததுமே, பாஜக ஜெர்க் ஆனது.. சோனியாவை சந்தித்ததுமே பாஜகவுக்கு கலக்கம் சூழ்ந்துகொண்டது..

யோசனை

யோசனை

இதனால், எதிர்க்கட்சிகளின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் பாஜக ஒரு யோசனையில் இறங்கி உள்ளதாம்.. அதாவது எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்புக்கு போதிய அவகாசம் தராமல், சீக்கிரமாகவே மக்களவை தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது... இப்போதைய மக்களவையின் ஆண்டுகாலம் 2024, ஏப்ரல்-மே மாதத்தில் முடிகிறது.. அதற்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும்.

தேர்தல்

தேர்தல்

முன்கூட்டியே தேர்தலை நடத்தினால் எதிர்க்கட்சிகளின் வேகத்தைக் குறைக்கலாம் என்று பாஜக திட்டமிடுவதாக தெரிகிறது. கூடவே எம்பி சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் இன்னொரு திட்டமும் பாஜகவிடம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இப்படி செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வியூகத்தைத் தகர்க்க பாஜக திட்டமிடுவதாக தெரிகிறது. அதாவது ஒரு வருடத்துக்கு முன்பேயே..!

கணக்கு

கணக்கு

அதாவது இவர்கள் எல்லாம் இணையவே ஒரு வருட காலம் ஆகும் என்பதால், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய விடாமல் முன்கூட்டியே தேர்தலை நடத்தும் பாஜகவின் வியூகம் சரி வருமா.. பாஜகவின் இந்த கணக்கை எதிர்க்கட்சிகள் உடைக்க முயல்வார்களா? அல்லது பாஜகவின் வழக்கமான பிரித்தாளும் சூழ்ச்சியே இந்த முறையும் வெற்றி பெற்றுவிடுமா? என்பது தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
BJP is planning to conduct the election in 2023, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X