சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆபாச வீடியோ சர்ச்சை.. ஒதுங்கியிருந்த கே.டி.ராகவன் மீண்டும் ஆக்டிவ்.. பாஜக வேட்பாளர்களுக்கு வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: ஆபாச வீடியோ சர்ச்சை பிரச்சினை காரணமாக சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த தமிழ்நாடு பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் கே.டி. ராகவன், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜகவின் முன்னணித் தலைவராக இருந்தவர் கே.டி.ராகவன். டிவி விவாத நிகழ்ச்சிகளில் அந்த கட்சி சார்பாக பங்கேற்று வாதங்களை எடுத்து வைத்தார்.

தொழில் ரீதியாக வழக்கறிஞரான ராகவன், படிப்படியாக முன்னேறி தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் என்ற அளவுக்கு வளர்ந்தார்.

21-09-2016.. ஜெயலலிதாவின் கடைசி நாள்.. கடைசி நிகழ்ச்சி.. கடைசி பேச்சு.. கடைசி தருணம்.. உருக்கும் வீடியோ21-09-2016.. ஜெயலலிதாவின் கடைசி நாள்.. கடைசி நிகழ்ச்சி.. கடைசி பேச்சு.. கடைசி தருணம்.. உருக்கும் வீடியோ

ஆபாச வீடியோ

ஆபாச வீடியோ

இந்த நிலையில்தான் பாஜகவில் இணைந்த, பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் என்பவர், சில வாரங்களுக்கு முன்பாக தனது யூடியுப் தளத்தில் ராகவன் என்று குறிப்பிட்டு ஒரு ஆபாச வீடியோ வெளியிட்டார். அதில் மதன் ரவிச்சந்திரனால் ராகவன் என்று குறிப்பிடப்பட்ட நபர், பெண் ஒருவரோடு மொபைலில் வீடியோ கால் பேசியபடி, சுய இன்பம் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

ராகவன் மறுப்பு

ராகவன் மறுப்பு

இந்த வீடியோ காட்சிகளுக்கு ராகவன் மறுப்பு தெரிவித்தார். சட்டரீதியாக இந்த பிரச்சினையை சந்திக்க போவதாக அறிவித்தார். இருப்பினும் கட்சியின் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார். இன்னொரு பக்கம் மதன் ரவிச்சந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.

பாஜக இல்லை

பாஜக இல்லை

அதேநேரம் தனது பயோ விபரத்தில் பாஜக என்ற வார்த்தையை அவர் எடுத்துவிட்டார். வழக்கறிஞர் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். இப்படியாக கட்சி விவகாரங்களில் பட்டும் படாமல், தொட்டும் தொடாமல்தான் அவர் இருந்தார். ஆனால் நேற்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகவன் வாழ்த்து

ராகவன் வாழ்த்து

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் பாஜக சார்பில் ஒன்றிய / மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தாமரை சின்னத்தில் போட்டியிடும், அதேபோல் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள் உங்களுக்கு வெற்றியை இறைவன் கொடுக்கட்டும். இவ்வாறு ராகவன் ட்வீட் செய்தார்.

நெட்டிசன்கள் கேள்விகள்

நெட்டிசன்கள் கேள்விகள்

பழையபடி அரசியல் பதிவுகளை ராகவன், போட ஆரம்பித்து விட்டார் என்கிறார்கள் நெட்டிசன்கள். ஒவ்வொரு பதிவு போடும் போதும் பின்னூட்டத்தில் சென்று பழைய விஷயங்கள் பற்றி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் சில நெட்டிசன்கள். ஆனால் அந்த விவகாரம் தொடர்பாக ராகவன் எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை.

English summary
Former Tamil Nadu BJP general secretary K.T. Raghavan has congratulated the BJP candidates contesting the local body elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X