• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"கோடி".. இருக்கட்டுமே.. அவசரப்பட்டுட்டாரே செல்வம்.. முகமே வாடி போச்சு பாருங்க... பொறுத்திருக்கலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி தன் கையில் வரும் என்று காத்து கிடந்த நிலையில்.. அதை பாஜகவின் குஷ்புக்கு ஒதுக்கிவிட்ட நிலையில்.. கு.க. செல்வம் அப்செட்டில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..!

திமுகவின் கோட்டைகளில் ஒன்றுதான் ஆயிரம் விளக்கு தொகுதி.. இதை ஸ்டாலின் தொகுதி என்றே சொல்வார்கள்..

காரணம், இங்குதான் முக ஸ்டாலின் நிறைய முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.. ஒருமுறை ஹாட்ரிக் வெற்றியும் அடித்தார்.. இது சென்ட்டிமென்ட் தொகுதியும்கூட.. அதனால்தான், இங்கு திமுக பலம் பொருந்தியவாறே இருந்து வருகிறது.

 ஸ்டாலின்

ஸ்டாலின்

ஸ்டாலினுக்கு பிறகு கு.க. செல்வம், இந்த தொகுதியில் ஸ்டிராங் நபராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் விளங்கினார்.. 6 மாசத்துக்கு முன்பு குக செல்வத்தின் அரசியல் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட ஆரம்பித்தது.. உதயநிதியை ஆயிரம் விளக்கு தொகுதியில் நிறுத்த ஸ்டாலின் முயற்சி செய்வதாகவும், இதனாலேயே செல்வம் அதிருப்தியில் இருப்பதாகவும் ஒரு செய்தி கசிந்தது.

 பாஜக

பாஜக

இதைதான் வழக்கம்போல பாஜக சரியாக பயன்படுத்தி கொண்டது.. யாரெல்லாம் அதிருப்தியில் உள்ளார்களோ, அவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு வந்த நிலையில்தான், குக செல்வத்தின் அதிருப்தியும் தெரியவந்தது.. இதற்கு பிறகு டெல்லி சென்றார்.. திமுகவின் அதிருப்தி எம்எல்ஏவானார்.. பிறகு பாஜகவில் இணைந்தே விட்டார்.

 ஆயிரம் விளக்கு

ஆயிரம் விளக்கு

இவ்வளவும் செய்த தனக்கு எப்படியும் ஆயிரம் விளக்கு தொகுதியை ஒதுக்கும் என்றுதான் செல்வம் கணக்கு போட்டு வந்தார்.. அளவுக்கு அதிகமாக நம்பியும் வந்தார்.. அவ்வளவு ஏன், ஆயிரம் விளக்கு தங்களுக்கு வேண்டும் என்று பாஜக அதிமுகவிடம் அடம் பிடித்து கேட்டபோதுகூட, அது அநேகமாக செல்வத்துக்குதான் இருக்கும் என்றும் நம்பப்பட்டது.. ஆனால், இறுதியில் அது குஷ்புக்கு ஒதுக்கப்பட்டதும், குக செல்வம் அதிருப்திக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

 உதயநிதி

உதயநிதி

அதுமட்டுமல்ல, யாரை நிறுத்த திமுக முயற்சி செய்கிறது என்று பகிரங்கமாக பேட்டி தந்தாரோ, அந்த உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அடுத்த ஷாக் ஆக குக செல்வத்துக்கு ஏற்பட்டதாக தெரிகிறது... இப்போது தொகுதிக்குள் பம்பரமாக சுழன்று சுழன்று வேலை பார்க்கும் குஷ்புவின் அதிரடிகளை கண்டு, தானும் தன் பங்கினை ஆற்றி வருகிறார்.

 புது பொறுப்பு

புது பொறுப்பு

எனினும், சீட் கிடைக்காத விரக்தி இன்னமும் குக செல்வம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், அவரை பாஜக தரப்பு சமாதானம் செய்து வருகிறதாம்.. தேர்தலுக்கு பிறகு மத்திய நிறுவனம் ஒன்றில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் தந்துள்ளதாம்..

 சற்று வருத்தம்

சற்று வருத்தம்

ஆயிரம் பொறுப்பு தந்தாலும், "ஆயிரம் விளக்கு" என்றாலே அது குக செல்வம்தான் என்ற பெயர் மெல்ல மறையத்தான் செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை. ஒருவேளை குக செல்வம் அன்று அமைதி காத்திருந்தால், அல்லது பொறுமை காத்திருந்தால், இதே ஆயிரம் விளக்கில் செல்வம்தான் சுழன்று சுழன்று ஆதரவு கேட்டு வந்திருப்பார் என்பதையும் நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. செல்வம் தானாக விலகி திமுகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளார் என்றும் சொல்லாமல்.. பார்ப்போம்..!

English summary
BJP Ku Ka Selvam is said to be dissatisfied
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X