• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"ஓவர்" சத்தமா இருக்கே... போய் வேலை ஏதாவது இருந்தா பாருங்க.. போட்டு தாக்கி.. கடுப்பான குஷ்பு.. !

Google Oneindia Tamil News

சென்னை: "போய் வேலை இருந்தா பாருங்க" என்று குஷ்பு போட்ட ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. திமுகவில் இருப்பவர்களை சுட்டிக்காட்டியே, குஷ்பு இந்த ட்வீட்டை போட்டிருக்கிறார்.. ஆனாலும், குஷ்பு யாரை இப்படி குறிப்பிட்டு சொல்கிறார் என்று தெரியாமல் ட்விட்டர்வாசிகள் கன்பியூஸ் ஆகி வருகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, நேற்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது.. இதில் அதிக அளவு பேசப்பட்ட வேட்பாளர்களில் ஒருவர் குஷ்பு..

திமுக, காங்கிரஸ் என கட்சிகளுக்கு சென்றுவந்தாலும், பாஜகவில் சேர்ந்த நிலையில், முதல்முறையாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.. அதிலும் திமுகவின் கோட்டையான ஆயிரம் விளக்கில் களம் இறக்கி விடப்பட்டார். இந்த தொகுதிக்கு ஸ்டாலினின் தொகுதி என்றே ஒரு பெயர் இருக்கிறது.

 தைரியம்

தைரியம்

அப்படி இருந்தும், இங்கு துணிச்சலாக போட்டியிட்டார்.. எதிர்பார்க்கப்பட்ட சேப்பாக்கம் ஒதுக்காவிட்டாலும் தைரியமாக இங்கு போட்டியிட்டார்.. தொகுதியில் சிஏஏ விவகாரத்தில் பாஜக மீது மக்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று தெரிந்தும்,சவாலாக ஏற்று ஓட்டு கேட்டு வந்தார்..

 பந்தா

பந்தா

குஷ்புவின் பிரச்சார பாணி வழக்கமான அரசியல் தலைவர்களை போல் இல்லாமல் வெகு இயல்பாக இருந்ததும், எந்தவித பந்தாவும் இல்லாமல் சகஜமாக சிரித்தபடி வாக்கு சேகரித்து வருவதையும் கண்டு பாஜகவினரே கொஞ்சம் வியப்பாகத்தான் பார்த்தனர். குஷ்புவை தவிர வேறு யாரையும் வேட்பாளராக நிறுத்தியிருந்தால், இந்த அளவுக்குகூட ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆதரவு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

சத்தம்

சத்தம்

அந்த அளவுக்கு சுழன்று சுழன்று வேலை பார்த்த குஷ்பு, தனது ட்விட்டரில் 'போய் வேலை இருந்தா பாருங்க' என்று பதிவிட்டுள்ளார்.. "தேர்தல் முடிந்து விட்டன.. ஆனால் தோல்வி பயத்தால் திமுகவினர் சிலர் சித்த பிரமை பிடித்தவர்கள் இன்னமும் சத்தம் போட்டு கொண்டிருப்பதை பார்த்துக்கிட்டு இருக்கேன்.. போய் வேலை இருந்தா பாருங்க.. ஒரு பெண்ணை மதிக்காத கட்சியின் பேச்சு எப்படி இருக்கும்? அது தமிழ் மக்களுக்கு தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.

திமுக

திமுக

திமுகவுக்கும் குஷ்புவுக்கும் ஏற்கனவே பிரச்சனைகள் இருந்து வருவது தெரிந்த விஷயம்.. திமுகவில் இருந்தபோது, தன்னை கையை பிடித்து இழுத்துவிட்டனர், முந்தானையை பிடித்து இழுத்துவிட்டனர், இதையெல்லாம் ஸ்டாலினிடம் அப்போது சொல்லியும் கண்டுகொள்ளவே இல்லை.. பெண்களை மதிக்க தெரியாதவர், எப்படி இந்த தமிழக மக்களின் துயர் துடைப்பார் என்று ஆயிரம் விளக்கு தொகுதி முழுக்க தூற்றி கொண்டிருந்தார் குஷ்பு.

 பிரச்சாரம்

பிரச்சாரம்

எனினும், திமுகவில் இவர் யாரை குறிப்பிட்டு இந்த ட்வீட் பதிவிட்டுள்ளார் என்று தெரியாததால், நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்... அதேசமயம், தேர்தல் நேற்று முடிந்த நிலையில், இப்போதுதான் ஃப்ரீ ஆகி உள்ளார் குஷ்பு.. கடுமையான வெயிலில் அலைந்து திரிந்து பிரச்சாரம் செய்ததில், தன்னுடைய முகத்தை ஃபேஸ்மாஸ்க் போட்டு சருமத்தை பாதுகாக்கும் வேலையில் இறங்கி உள்ளார்..

 யார் அது?

யார் அது?

மஞ்சள், தேன், தயிர், மூன்றையும் கலந்து ஒரு பேஸ்ட் போல ரெடி செய்து முகத்தில் தடவினால், கருமை படர்ந்த முகத்திற்கு அது மிகவும் சிறந்தது.. இதைதான் குஷ்புவும் தெரிவித்து டிப்ஸ் தந்துள்ளார். இந்த ட்வீட்டையும் போட்டோவுடன் பதிவிட்டுள்ளார். இருந்தாலும், "போய் வேலையை பாருங்க"ன்னு சொன்னாரே, திமுகவில் குஷ்பு யாரை சொல்லி இருப்பார்?!

English summary
BJP Kushboo tweeted about DMK party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X