சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோட்டையில் "காவி" கொடி பறக்கணும்னா.. நிஜமாகவே பொங்கல் வைத்திருக்கலாமே.. "பஞ்சு பஞ்சாய்" பறந்த கௌரவம்

குஷ்புவின் மதுரை பொங்கல் விழா இணையத்தில் வைரலானது

Google Oneindia Tamil News

சென்னை: "ஒரு பொங்கலை ஒழுங்காக வைக்க தெரியவில்லை.. இதுல அமைச்சர்களாகவும், கோட்டையில் காவி கொடி பறக்கணும்" என்று பாஜகவுக்கு ஆசை மட்டும் இருக்கிறதே என்ற விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.. இதற்கு காரணம் நேற்று மதுரையில் குஷ்பு வைத்த பொங்கல் சோஷியல் மீடியாவில் பெரும் வைரலானதுதான்!

Recommended Video

    பஞ்சு வைத்து சமாளித்த மகளிரணி.. வைரலான பாஜகவின் பொங்கல் விழா | Oneindia tamil

    இந்துக்களின் ஓட்டுக்களை எப்படி மையமாக வைத்து தமிழக பாஜக வேல் யாத்திரை நடத்தியதோ, அதுபோலவே இன்னொரு வியூகத்தையும் கையில் எடுத்தது.. ரஜினி கட்சி தொடங்காத பட்சத்தில், இந்துக்களின் பெருவாரியான ஆதரவை பெறுவதற்காகவே, பாஜகவின் ஐடி விங் கையில் எடுத்ததுதான் பொங்கல் பண்டிகை.

    பயிர்களின் அறுவடையை மையமாகக் கொண்டு கொண்டாடப்படும் இந்த பண்டிகையை, இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்கான களமாக மாற்ற பாஜக பிளான் செய்து வருகிறது.. அதற்காகவே அனைத்து மாவட்ட கிளைகளும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பாஜக

    பாஜக

    இந்த விழாவில், பாஜகவிற்கு ஆதரவான நபர்களை வரவழைத்து உரையாற்றவும் ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது.. இப்படி செய்வதால், தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களை பாஜகவுடன் எளிதில் இணைத்துக் கொள்ள ஓரளவு உதவியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. அதன்படியே பொங்கல் விழாக்களை மாவட்டங்களில் நடத்தி வருகிறது.

    நமீதா

    நமீதா

    அந்த வகையில் நமீதாவும் பொங்கல் வைத்தார்.. "போங்கல்" வாழ்த்துக்கள், "போங்கலோ போங்கல்" என்று நமீதா சொன்னதில் நமக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.. ஆனால், மதுரையில் குஷ்பு தலைமையில் நடந்த பொங்கல் விழா ஹைலைட்டாக பேசப்பட்டது. இதற்கு 2 காரணங்கள் உள்ளன.. ஒன்று, இந்த விழாவிற்கு குஷ்பு ரொம்ப லேட்டாக வந்து சேர்ந்தார்.. காலை 10 மணியிலிருந்து 150-க்கும் மேற்பட்ட பெண்கள் ரெடியாகவே இருந்தனர்.

    பெண்கள்

    பெண்கள்

    அடுப்புகளை பற்றவைத்துவிட்ட பெண்கள் மதியம் 1 மணிக்கு அந்த பொங்கலை கிண்டி முடித்தனர். குஷ்புவோ, சாயங்காலம் 5 மணிக்குதான் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். பொங்கலை கிண்டுவது மதியம் 1 மணிக்கு என்று சொல்லப்பட்ட நிலையில், சாயங்காலம்தான் வந்தார்.. முடிந்துபோன பொங்கல் விழாவில் குஷ்பு கலந்து கொண்டபிறகு, அவருக்காகவே மறுபடியும் இன்னொரு முறை அடுப்புகளை பற்றவைத்து 2-வது முறையாக ஒரு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    பஞ்சு

    பஞ்சு

    இன்னொரு காரணம், இவ்வளவு பெரிய விழாவில் ஒரே ஒரு பானையில் மட்டும் நிஜமாக பொங்கல் வைத்திருந்தனர்.. மற்றபடி அந்த இடத்தை சுற்றிலும் மண்பானை செட்டப் செய்திருந்ததால்.. அதில் பஞ்சுக்களை பொங்கல் போல திணித்து வைத்திருந்தனர்.... அந்த பானைகளை படம் பிடிக்க செய்தியாளர்கள் வந்தால், அவர்களை பார்த்ததும், நிஜமாகவே பொங்கலை கிண்டுவதைபோல மகளிரணியில் அந்த பானைக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டனர்.. பஞ்சு, மஞ்சள் பொடி, அரிசி இல்லா ஆட்டு உரல், வெறும் உலக்கை, என பொங்கல் விழா ஒரே நாளில் மதுரையில் பல்லிளித்து விட்டது.

    பொங்கல்

    பொங்கல்

    வழக்கமாக மதுரையில் பொங்கல் விழா என்றாலே அத்துனை சிறப்புடன் நடக்கும்.. 150 பேருக்கு நிஜமான பொங்கலைபொங்க தெரியாதா? பாரம்பரிய மிக்க மதுரையில் இப்படி செட்டப் தேவையா? என்றுதான் கேள்விகள் எழுகின்றன.. கோட்டையில் பாஜக கொடி பறக்கும், சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எண்ணிக்கை உயரும் என்று பேசும் தமிழக பாஜக, மதுரையில் மட்டுமாவது நிஜமான பொங்கலை வைத்திருக்கலாம் என்பதே அனைவரின் கூற்றும்!

    English summary
    BJP Kushboos pongal Celebrating in Madurai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X