• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"பஞ்ச்".. பழனியில் நின்று முருகன் சொன்ன "அந்த" வார்த்தை.. தாராபுரம் மட்டுமில்லை.. 20 தொகுதியுமாம்!

|

சென்னை: தக்காளி வாங்கியும், தெலுங்கு பேசியும் பிரச்சாரம் செய்தாரே எல்.முருகன், தன்னுடைய தாராபுரம் தொகுதியில் கண்டிப்பாக வெற்றியை பெறுவேன் என்று உறுதிபட சொல்கிறார்.. அதுமட்டுமல்ல, போட்டியிடும் 20 தொகுதிகளிலும் பாஜக வெற்றியை பெற போவது நிச்சயம் என்றும் அடித்து சொல்கிறார் தமிழக பாஜக தலைவர்.

இந்த முறை அனைத்து கட்சிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, தேர்தல் சம்பந்தமான பேச்சை எடுத்தது தமிழக பாஜகதான்.. முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரத்தை முன்வைத்து கிட்டத்தட்ட 4 மாசமாக அதிமுகவை கலங்கடித்தது.

யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக மேலிடம்தான் முடிவு செய்யும் என்ற வார்த்தையை கொளுத்திப்போட்டதே எல்.முருகன்தான்.. இவருக்கு பிறகு பொன்.ராதா சொன்னார்.. வானதி சொன்னார்.. அண்ணாமலைகூட சொன்னார்.. கடைசியாக, பாஜக மேலிட தலைவர்களே எடப்பாடியை முன்மொழிந்துவிட்டு போனதுதான் நடந்தது.

 எல்.முருகன்

எல்.முருகன்

அதேபோல, 60 சீட் வேண்டும் என்று துண்டை விரித்தது எல்.முருகன்தான்.. "60 சீட்டிலும் ஜெயிப்போம் என்று சொல்லி இருக்கிறீர்களே" என்று செய்தியாளர்கள் ஒருமுறை முருகனை கேட்டார்கள்.. அதற்கு அவர், 2016ஆம் ஆண்டில் 75 இடங்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தது பாஜகதான்.. அதன் அடைப்படையில்தான் இப்பவும் 60 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றார். இந்த விளக்கத்தை அதிமுக ஏற்கவில்லை என்பது கடைசியில்தான் தெரிந்தது.. 20 சீட்களை மட்டுமே ஒதுக்கியது. இந்த 20 சீட்டுக்கும் பாஜக தலைவர்கள் பலமுறை சென்னை வந்துபோனதையும் தமிழகம் நன்கு அறியும்.

பாஜக

பாஜக

தான் போட்டியிடும் 20 தொகுதிகளிலும் பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்தது.. இந்த வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மறுபடியும் பாஜக தலைவர்கள் இங்கு வந்து போனார்கள்.. இதில் உபி முதல்வர் யோகி வந்தபோது கோவையே திணறிவிட்டது என்பது வேறு விஷயம்.. நமீதா என்ன பேசிவிட்டு போனார் என்று இப்போது வரை புரியவில்லை.. ராதாரவி பேச்சை இப்போது வரை யாரும் கண்டிக்கவில்லை.

 தனிநபர் தாக்குதல்

தனிநபர் தாக்குதல்

கொள்கைகளை முன்வைத்து ஓட்டு கேட்காமல், சாதனைகளை முன்வைத்தும் கேட்காமல், தனிநபர் தாக்குதலை மட்டுமே தொடுத்து பாஜகவின் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டதாக சோஷியல் மீடியாவில் விவாதமும் ஓடியது.. இதற்கு நடுவேதான் பலவித தேர்தல் கருத்து கணிப்புகள் வெளிவந்தன.. அதில், இதுவரை எந்த தொகுதியிலும் பாஜக வெற்றி பெறுவதாக சொல்லவே இல்லை.. 2, 3 தொகுதிகளில் டஃப் இருக்கும், மற்றபடி வெற்றிவாய்ப்பு இருக்காது என்பதே அனைத்துவிதமான தேர்தல் கருத்து கணிப்புகளின் முடிவாக இருக்கிறது.

பிரச்சாரம்

பிரச்சாரம்

ஆனால், இந்த கருத்து கணிப்புகளையும் தமிழக பாஜக மறுத்து வருகிறது.. கடந்த எம்பி தேர்தலில் ஒரு பொய் பிரச்சாரத்தின் மூலம் பாஜகவிற்கு எதிரான வியூகங்களை திமுக அமைத்தது.. ஆனால், இந்த அதை எல்லாம் தவிடுபொடியாக்கி, அதிக இடங்களை கைப்பற்றி, பாஜக சரித்திரம் படைக்க இருக்கிறது.. மக்களை குழப்பும் வகையில் திமுக ஜெயிக்கும் என்ற கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

 கருத்து கணிப்புகள்

கருத்து கணிப்புகள்

இம்முறை மக்கள் ஏமாற மாட்டார்கள். எத்தனை கருத்து கணிப்புகள் வந்தாலும், கண்டிப்பாக அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்று பாஜகவினர் சொல்லி வருகிறார்கள். இதே கருத்தைதான் மீண்டும் எல்.முருகன் சொல்லி உள்ளார்.. திண்டுக்கல் மாவட்டம் பழனியில், எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.. தங்கரதம் இழுத்தார்...!

 வேல் யாத்திரை

வேல் யாத்திரை

பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. தாராபுரத்தில் நான் வெற்றி பெறுவேன்.. வெற்றி வேல் யாத்திரை துவங்கியது முதல் நான் அடிக்கடி பழநி முருகனை தரிசித்து வருகிறேன்... திமுகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் பண விநியோகம் செய்துள்ளனர்.. அவர்களுக்கு மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டி உள்ளனர்... ஆட்சியில் பங்கு குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும்" என்றார்.

அதிமுக

அதிமுக

20 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று முருகன் நம்பிக்கையுடன் சொல்கிறார் என்றலும், ஆட்சியில் பங்கு என்று ஒரு பஞ்ச் வைத்துவிட்டு போயுள்ளார்.. இதை எப்படியும் அதிமுக தரப்பு நோட் செய்யும் என்றாலும், வாக்குப்பதிவு முடிவு வரை பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று மட்டும் தெரிகிறது..!

English summary
BJP: L Murugan is confident that the BJP will win in all 20 constituencies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X