• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

24 மணி நேரம் டைம்.. அண்ணாமலைக்கு அவகாசம் வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி.. வெடித்த பிரச்சனை

Google Oneindia Tamil News

சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியம் 20 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம் வாங்குவதாக கூறிய குற்றச்சாட்டுக்கு 24 மணி நேரத்திற்குள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆதாரம் தர வேண்டும் . இல்லையென்றால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எனர்ஜி கம்பெனி, 4000 முதல் 5000 கோடி ஆர்டரை தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் மேற்கொள்ள உள்ளது. தற்போது அந்த கம்பெனி நொடிந்து போய் உள்ளது. ஆனால் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் அதை வாங்கி, தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து 4000 கோடி முதல் 5000 கோடி வரையில் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதை போன்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு லாபத்தை ஏற்படுத்த இந்த முயற்சி நடக்கிறது. கம்பெனி பெயரை இப்போது குறிப்பிட விரும்பவில்லை.

எல்லாம் ஓகே.. 2 விஷயத்தில் சிக்கல்.. இப்படியே போனால் உலக கோப்பை வெல்வது கஷ்டம்.. கவனிப்பாரா தோனி? எல்லாம் ஓகே.. 2 விஷயத்தில் சிக்கல்.. இப்படியே போனால் உலக கோப்பை வெல்வது கஷ்டம்.. கவனிப்பாரா தோனி?

அவர்கள் போகிற பாதை அதை நோக்கி போகிறது. நஷ்டமடைந்த நிறுவனத்தை வாங்கி, மின்சார வாரியத்திடமிருந்து ஒப்பந்தம் போட்டு லாபம் சம்பாதிக்க உள்ளனர். இதனால், மின்சார சப்ளை கூடி விடும் என்று காட்டுவார்கள். திமுக அரசுக்கு இது கை வந்த கலை. எனவே எச்சரிக்கையாக சொல்கிறேன். 2006-11 ஆட்சி கால பாதைக்கு திமுக போகாது என நம்புகிறேன். அப்படி போனால் எங்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம். தமிழக மின்சாரத் துறை அமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு இதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்" என்றார்.

 4மடங்கு அதிக விலை

4மடங்கு அதிக விலை

மேலும் அண்ணாமலை கூறும் போது, தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கு, அதாவது உற்பத்தி விலையைவிட 4 மடங்கு அதிக விலைக்கு வாங்க திமுக அரசு ஆயத்தமாகி வருகிறது. இது, ஏற்கெனவே கடன் சுமையில் இருக்கும் மின்சார வாரியத்தை மேலும் மோசமாக்கிவிடும்" என்றார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 20 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம் வாங்குவதாக கூறிய குற்றச்சாட்டுக்கு 24 மணி நேரத்திற்குள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆதாரம் தர வேண்டும் . இல்லையென்றால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

அவதூறு பரப்புகிறார்

அவதூறு பரப்புகிறார்

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது " எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியுடன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசிவருகிறார். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைமைப் பொறுப்பில் இருப்பவர் சரியாக விசாரிக்காமல் அவதூறு பரப்புவதை தவிர்க்கவேண்டும்.

900 மெகா வாட்

900 மெகா வாட்

4,320 மெகாவாட் நிறுவுத்திறன் நம் மாநில மின்வாரியத்துக்கு உள்ளது. அதில் கடந்த ஆட்சியின்போது 1,800 மெகாவாட்தான் உற்பத்தி நடந்திருந்தது. பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட காரணங்களினால் கடந்த ஆட்சியில் உற்பத்தியானது, அதன் நிறுவுத்திறனை விடவும் குறைக்கப்பட்டிருந்தது. குறைக்கப்பட்ட உற்பத்தி மீண்டும் அதிகரிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் மாநிலத்தின் தேவையை மாநிலமே நிறைவாக செய்துகொள்ள வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களிடம் உத்தரவிட்டு, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருந்தார். முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தற்போது 3,500 மெகா வாட் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. 900 மெகா வாட் அளவு மின்சாரம் தனியார் நிறுவனங்கள் மாநில அரசுக்கு தருகின்றன. 4,000 மெகா வாட் தருவதாக தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர்களால் முழுவதுமாக அதைச் செய்ய முடியவில்லை. இந்த இடைவெளியை குறைக்க, இந்திய மின் சந்தை வழியாக தற்போது நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.

 320 மில்லியன் யூனிட்

320 மில்லியன் யூனிட்

தினந்தோறும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இந்திய மின் சந்தையில் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்யப்படும். அதன்படி தமிழகத்தின் சராசரி தேவையான 320 மில்லியன் யூனிட் பெறப்படுகிறது. இதில் 24.09.2021 முதல் 19.10.2021 வரையிலான காலகட்டத்தில் இந்திய மின் சந்தையில் நாம் மொத்தமே கொள்முதல் செய்தது, 397 மில்லியன் யூனிட் மட்டுமே. பெறப்பட்ட இந்த 397 மில்லியன் யூனிட்டும் கூட, ரூ.20 க்கு கொள்முதல் செய்யப்பட்டது, 65 மில்லியன் யூனிட் மட்டுமே. அதாவது, கொள்முதல் செய்யப்பட்டவற்றிலேயேவும், வெறும் 1.04% மட்டும்தான் அதிக விலையில் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.

 தமிழ்நாடு குறைவு

தமிழ்நாடு குறைவு

இதுவே குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ரூ.20க்கு 131 மில்லியன் யூனிட்; ரூ.20 க்கு 52 மில்லியன் யூனிட் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு வெறும் 1.04% மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பது மிக மிக குறைவும்தான். நிலக்கரி தட்டுப்பாட்டால்தான் அங்கு போய் கொள்முதல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்றபடி தமிழ்நாடு மின்துறை மிகச்சிறப்பாகவே செயல்படுகிறது.

அறிந்துவைத்து பேசுங்கள்

அறிந்துவைத்து பேசுங்கள்

இவற்றையெல்லாம் அறியாமல் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நம் மாநில அரசு 4 மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்க முயற்சிப்பதாக கூறியுள்ளார். ஒரு கட்சியின் தலைவர், நான் மேற்குறிப்பிட்ட தகவல்களையெல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டு பேச வேண்டும். குறிப்பாக நம் மாநிலத்தில் எங்கிருந்து மின்சாரம் வாங்குகிறோம், எவ்வளவு வாங்கியுள்ளோம், பிற மாநிலங்களில் எவ்வளவு வாங்கியுள்ளார்கள், இங்கு நிலைமை எவ்வளவு கட்டுக்குள் உள்ளது என்பதையெல்லாம் அறிந்துவைத்து பேசவேண்டும்.

செயல்பாடுகள் எப்படி

செயல்பாடுகள் எப்படி

தமிழ்நாட்டில் நிலக்கரி தட்டுப்பாட்டால், இதுவரை ஒரே ஒரு மணி நேரம்கூட அனல்மின் நிலையம் எதுவும் தனது செயல்பாட்டை நிறுத்தவில்லை. அந்தளவுக்கு துரிதமாகவும் திட்டமிடுதலுடனும் செயல்படுகிறது தமிழக அரசு. நாங்கள் வாங்கியுள்ள 1.04% கூடுதல் மின்சாரமும்கூட, ஒன்றிய அரசு இந்திய மின் சந்தையில் வாங்கியதுதான். இந்த அளவும், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவுதான். இந்த விவரம் எதுவுமே தெரியாமல், நடைமுறை தெரியாமல் இந்த ஆட்சி மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியைப் போல இந்த ஆட்சியில் சீர்கேடு நடந்துவிடக்கூடாது என நினைத்து நாங்கள் மிக மிக கவனமாக இருந்து வருகிறோம். அப்படியிருக்கையில் இப்படி அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் பேசுவதை ஏற்கமுடியாது.

 செந்தில் பாலாஜி அவகாசம்

செந்தில் பாலாஜி அவகாசம்

இந்நிலையில் மின்வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளது குறித்து தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை எப்போது எங்கு வெளியிட்டாலும் அங்கு தான் வர தயார். அதுமட்டுமின்றி தன்னிடம் உள்ள ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும். அப்படி இல்லையென்றால் மன்னிப்பு கேட்கவேண்டும்" இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியின் போது கூறினார்.

English summary
Tamil Nadu BJP leader Annamalai must give evidence within 24 hours of the allegation that the Tamil Nadu Electricity Board is buying a unit of electricity for 20 rupees. Electricity Minister Senthilpalaji has warned that otherwise annamalai should ask to a public apology will be made.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X