சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு

Google Oneindia Tamil News

சென்னை: பால் முகவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூறிய ஸ்டாலின் தற்போது விலை உயர்வை அரசியலாக்குவதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து வகையான ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட உள்ளது. பால் கொள்முதல் விலையை 4 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை தமிழக அரசு உயர்த்தி வழங்கி இருப்பதால் விற்பனையை விலையையும் அதிகரித்துள்ளது.

bjp leader tamilisai attacks mk stalin over kashmir and milk price issue

இந்நிலையில் பால் விலை உயர்வு என்பது ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை என முக ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே இந்த விலை உயர்வு என்று அரசு கூறுவதை கண்டித்துள்ள ஸ்டாலின், தரமான விநியோகம் என்பது தமிழக அரசின் கடமையல்லவா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனிடையே பால் முகவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூறிய ஸ்டாலின் தற்போது விலை உயர்வை அரசியலாக்குவதாக தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், பால் முகவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கூறிய முக ஸ்டாலின் இப்போது விலை உயர்வை வைத்து அரசியல் செய்கிறார்

இந்தியாவில் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீருக்கு பாகிஸ்தான் உரிமை கோருவதை திமுக ஆதரிக்கிறதா? என்று சந்தேகம் ஏற்படுகிறது திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றார்.

English summary
tamilnadsu bjp leader tamilisai attacks on dmk, mk stalin doing politics in milk price hike
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X