சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாதகமாக வந்துள்ள எக்ஸிட் போல் முடிவுகள்.. ஹேப்பி மோடில் பாஜக தலைவர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளதால் அக்கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது.

நேற்று மாலை தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. இந்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு சாதகமாகவே வந்துள்ளது.

மண்ணை கவ்வும் பாஜகவின் வாய் சொல் வீரர்கள்.. ஒரு இடத்தில் மட்டும்தான் வெற்றி என எக்சிட் போல் கணிப்பு மண்ணை கவ்வும் பாஜகவின் வாய் சொல் வீரர்கள்.. ஒரு இடத்தில் மட்டும்தான் வெற்றி என எக்சிட் போல் கணிப்பு

எச் ராஜா

கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்ததை தொடர்ந்து அக்கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் டிவிட்டரில் தங்களின் கருத்தை பதிவிட்டுள்ளனர். அதன்படி எச் ராஜா பதிவிட்டுள்ள டிவிட்டில் கூறியிருப்பதாவது, அனைத்து மாநிலங்களிலும் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது யாருக்கு சாதகம் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம் எக்காரணம் கொண்டும் தொங்கு பாராளுமன்றம் வந்துவிடக் கூடாது என்று எண்ணியவர்கள் மோடிக்கு வாக்களித்துள்ளனர் என்பதே காரணம்

திசை தெரிந்துவிட்டது

கருத்துக்கணிப்புகள் வெற்றியின் திசையை காட்டிவிட்டன. 23ஆம் தேதி அதன் அளவு தெரிந்துவிடும். பாஜக தனிப்பெரும்பான்மை பெரும் என்பது இப்போது தெளிவாகிவிட்டது. மீண்டும் மோடி என பதிவிட்டுள்ளார் எச் ராஜா.

10 மாதங்களாக

இதேபோல் பாஜக மூத்த நிர்வாகியான எஸ்வி சேகர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தேர்தலுக்கு முன்னும் தேர்தலுக்கு பின்னும் வெளிவந்த கருத்துக்கணிப்புக்களுக்கு உள்ள வித்தியாசம் பேராசைக்கும் , உண்மைக்கும் உள்ள வித்தியாசமே. கடந்த 10 மாதங்களுக்கு முன்பே 300 இடங்களுக்கு மேல் பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றேன். மகிழ்ச்சி. என தெரிவித்துள்ளார்.

சாணக்யா

இதேபோல் வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ள டிவிட்டில் டுடேஸ் சாணக்யாவின் கருத்துக்கணிப்பை மேற்கோள்காட்டி வெற்றியின் அடையாளமாக 2 விரல்களை காட்டியுள்ளார்.

English summary
BJP leaders are happy with the Exit polls. They have twitted about exit polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X