சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து வாக்கு சதவீத்தை பறிகொடுத்த பரிதாப பாஜக

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்தும் வாக்கு சதவீதத்தை பரிதாபமாக பறிகொடுத்திருக்கிறது பாஜக.

2014 லோக்சபா தேர்தலில் மதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது பாஜக. அத்தேர்தலில் பாஜக 5.5% பெற்றது. இத்தனைக்கும் 5%க்குள்தான் பாஜக இணைந்து போட்டியிட்ட கட்சிகளுக்கான வாக்கு சதவீதம்.

ஒபிஎஸ்சின் சொந்த ஊரில் திமுக வேட்பாளர் முன்னிலை.. பின்னடைவில் அதிமுக ஒபிஎஸ்சின் சொந்த ஊரில் திமுக வேட்பாளர் முன்னிலை.. பின்னடைவில் அதிமுக

அதிமுக பாஜக கூட்டணி

அதிமுக பாஜக கூட்டணி

இம்முறை ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்து போட்டியிட்டது. ஆனாலும் பாஜக 3.38% வாக்குகளைத்தான் இதுவரை பெற்றுள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக வாக்கு சதவீதத்தை பரிதாபமாக பறிகொடுத்திருக்கிறது.

அதிமுகவினர் கைவிரிப்பு?

அதிமுகவினர் கைவிரிப்பு?

அதிமுகவினர் பாஜகவுடனான கூட்டணியை புறக்கணித்திருக்கலாம்; அல்லது தினகரன், சீமான், மக்கள் நீதி மய்யம் ஆகியவை அதிமுகவுக்கு வர வேண்டிய வாக்குகளை பிரித்திருக்கலாம் அல்லது அதிமுகவின் 7% வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே திமுகவுக்கு போயிருக்கலாம்.

தமிழகத்தில் படுதோல்வி

தமிழகத்தில் படுதோல்வி

நாடு முழுவதும் வெற்றி கொண்டாட்டத்தில் பாஜகவினர் இருக்கின்றனர். தமிழகத்தில்தான் படுமோசமான தோல்வியைத் தழுவியுள்ளது பாஜக.

அதிமுகவுக்கு சறுக்கல்

அதிமுகவுக்கு சறுக்கல்

அதேபோல அதிமுகவின் சாக்கு சதவீதமும் சரிந்துள்ளது. அதிமுகவின் வாக்கு சதவீதம் 18% ஆக குறைந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
According to the EC Data, BJP loses its vote percentage in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X