India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விக்ரம் வெற்றிக்களிப்பில் கமல்.. “அதை” வேற நியாபகப்படுத்திய வானதி! விவாதமான வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தை பார்த்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கமல்ஹாசனை தேர்தலில் வீழ்த்தியது மகிழ்ச்சியளிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நிதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியானது.

விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

அப்போ கன்ஃபார்ம்.. திமுக அரசிடம் “ஓபிஎஸ் மகன்” பரபரப்பு கோரிக்கை! சிக்கலில் எடப்பாடி அப்போ கன்ஃபார்ம்.. திமுக அரசிடம் “ஓபிஎஸ் மகன்” பரபரப்பு கோரிக்கை! சிக்கலில் எடப்பாடி

விக்ரம் திரைப்படம்

விக்ரம் திரைப்படம்

கடந்த சில மாதங்களாகவே திரையரங்குகளில் வெளியான தமிழ் திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெறாத நிலையில், விக்ரம் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது. தெலுங்கு திரைப்படமான RRR, கன்னட திரைப்படமான KGF உள்ளிட்டவற்றையே மிஞ்சும் அளவுக்கு விக்ரம் இருப்பதாக விமர்சனங்கள் வந்தன.

விக்ரம் பார்த்த வானதி

விக்ரம் பார்த்த வானதி

திரையரங்குகளில் ஒரு மாதம் கழித்தும் ரசிகர்கள் கூட்டத்துடன் விக்ரம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தை கண்டுகளித்தார். இதனை தொடர்ந்து விக்ரம் படத்தில் நடித்த நடிகர் கமல்ஹாசனுக்கு ட்விட்டரில் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்தா? கேலியா?

வாழ்த்தா? கேலியா?

அதில், தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன். விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இது வாழ்த்துபோல் இருந்தாலும் அரசியல் ரீதியாக கமலை வானதி சீண்டியுள்ளார் என அவரது பதிவுக்கு கீழே பலர் கருத்திட்டுள்ளனர்.

கமல்ஹாசனின் தேர்தல் தோல்வி

கமல்ஹாசனின் தேர்தல் தோல்வி

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அக்கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இதில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குள் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசனும் கோவை தெற்கு தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசனில் பாஜவின் வானதி சீனிவாசனிடம் போராடி தோல்வியடைந்தார்.

English summary
BJP MLA Vanathi Srinivasan wishes Actor Kamalhasan for Vikram movie Victory: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தை பார்த்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கமல்ஹாசனை தேர்தலில் வீழ்த்தியது மகிழ்ச்சியளிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X