சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதெல்லாம் விமான போக்குவரத்து துறை பார்த்துக்கும்.. நீங்கள் "இதை" கற்றுக் கொள்ளுங்க.. பாஜக நாராயணன்

Google Oneindia Tamil News

சென்னை: விமான அவசர வழி கதவு திறக்கும் விஷயங்களை எல்லாம் விமான நிறுவனமும் விமான போக்குவரத்து அமைச்சகமும் பார்த்து கொள்ளும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்ற இண்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவுதளை பயணிகள் யாரோ திறந்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விமான கட்டுப்பாட்டு இயத்துநரகத்திற்கு டிஜிசிஏ உத்தரவு பிறப்பித்தது.

இந்த புகாரில் முதலில் பெயர்கள் வெளியிடப்படாத நிலையில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா என்பதும் அவருக்கு அருகே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

அடிக்கடி தேர்தல் நடப்பதே ஊழலுக்கு முக்கிய காரணம்.. 'ஒரே தேர்தல்' வந்தால் கறுப்பு பணம் ஒழியும் : பாஜக அடிக்கடி தேர்தல் நடப்பதே ஊழலுக்கு முக்கிய காரணம்.. 'ஒரே தேர்தல்' வந்தால் கறுப்பு பணம் ஒழியும் : பாஜக

 விமானத்தின் அவசர வழி கதவு

விமானத்தின் அவசர வழி கதவு

அதாவது விமானத்தின் அவசர வழி கதவை விமானம் ஓடுதளத்தில் புறப்பட்ட போது தேஜஸ்வி சூர்யா திறந்ததாகவும் அதை அண்ணாமலை பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தேஸஜ்வி சூர்யா மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

தேஜஸ்வி சூர்யா

தேஜஸ்வி சூர்யா

அதன் பின்னர் தான் தேஜஸ்வி சூர்யாவோடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அமர்ந்திருந்தது தெரியவந்தது. அண்ணாமலையும் தேஜஸ்வியுடன் பயணம் செய்ததாக விளக்கியிருக்கிறார். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அன்று இண்டிகோ விமானத்தின் மூலம் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்று இருக்கிறார்கள்.

142 நிமிடங்கள்

142 நிமிடங்கள்

இந்த விமானம் 10.05 மணிக்கு புறப்பட வேண்டியது. ஆனால் தாமதமாக 142 நிமிடங்கள் கழித்தே புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானத்தில் அவசர கதவை திறந்த விவகாரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி விமான கட்டுப்பாட்டு இயக்குநர் எம்.டி.ஜி.சி உத்தரவிட்டிருக்கிறது. நடந்த அந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

தேஜஸ்வி சூர்யாவுடன் பயணம்

தேஜஸ்வி சூர்யாவுடன் பயணம்

அப்போது அவர் கூறுகையில் நானும் தேஜஸ்வி சூர்யாவும் பயணம் செய்தோம். அந்த விமானத்தில் முன்னாடி இருக்கும் நான்கு சீட்டு ஒன்றாக இருக்கும். தேஜஸ்வி எனக்கு முன்னால் இருந்த சீட்டில் அமர்ந்திருந்தார். 10 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் தாமதமாகத்தான் சென்றது. அவரை பார்க்க சிலர் வந்தனர். அடுத்தடுத்து பலர் வந்தனர். அதனால் தேஜஸ்வி சூர்யா எழுந்து எழுந்து அமர்ந்து கொண்டிருந்தார்.

அவசர வழி

அவசர வழி

அப்போதுதான் அவசர வழி கதவு லேசாக திறந்திருப்பதாக தேஜஸ்வி சூர்யா என்னிடம் தெரிவித்தார். உடனே நாங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் அளித்தோம். பைலட் வந்து விசாரித்தார். என்ன நடந்தது என கேட்டார். அதற்கு தேஜஸ்வி சூர்யா நான் ஜன்னலை அட்ஜஸ்ட் செய்தேன். அப்போது தவறுதலாக கைப்பட்டுவிட்டது என்றார்.

விசாரணை நடத்திய விமானி

விசாரணை நடத்திய விமானி

ஆனால் விமானியோ இதற்காகவெல்லாம் விமானத்தின் அவசர கதவு திறப்பது எல்லாம் இம்பாசிபிள் என்று கூறி உடன் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் பொறியாளர்கள் அங்கு வந்து வந்து பார்த்தனர். மொத்தமாக கதவை திறந்து விட்டு மாற்றிவிட்டு அங்கே என்ன நடந்தது என்பதை எழுதிக் கொடுக்கும்படி தேஜஸ்வி சூர்யாவிடம் கேட்டனர். தேஜஸ்வி சூர்யாவே கதவை திறக்கவில்லை. வெறுமனே கைதான் பட்டது. இதை அடுத்து தன்னுடைய தவறில்லை என்றாலும் தேஜஸ்வி சூர்யா எம்பி என்பதால் பொறுப்பாக மன்னிப்பும் கேட்டுவிட்டார். எனவே இது விபத்தாக திறக்கப்பட்டுள்ளது என்றே விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஒப்புக் கொண்டார் என அண்ணாமலை தெரிவித்தார்.

தயாநிதி மாறன்

தயாநிதி மாறன்

இந்த நிலையில் எம்பி தயாநிதி மாறன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நான் எமர்ஜென்சி கதவு அருகே அமர்ந்திருக்கிறேன். ஆனால் நான் அதை திறக்க மாட்டேன், அது பயணத்திற்கும் பயணிகளுக்கும் நல்லதல்ல. நான் இந்த கதவை திறந்தால் விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும். இது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும். மேலும் கதவை திறந்தால் மன்னிப்பு கடிதமும் எழுதி கொடுக்க வேண்டும். அதனால் நான் அப்படி செய்ய மாட்டேன் என தயாநிதி மாறன் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

செந்தில் பாலாஜி விமர்சனம்

செந்தில் பாலாஜி விமர்சனம்

இந்த வீடியோவை டேக் செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில் நான் எமர்ஜென்சி கதவு அருகே அமர்ந்திருக்கிறேன், ஆனால் நான் அதை திறக்க மாட்டேன், அது பயணத்திற்கும், பயணிகளுக்கும் நல்லதல்ல' - இன்டிகோ விமானத்தில் பயணம் செய்த மாண்புமிகு மக்களவை உறுப்பினர் அண்ணன் @Dayanidhi_Maran அவர்கள். இவ்வாறு செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

நாராயணன் திருப்பதி விமர்சனம்

நாராயணன் திருப்பதி விமர்சனம்

இதற்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: ஓ ! அதை விமான நிறுவனமும். விமான போக்குவரத்து அமைச்சகமும் கவனித்து கொள்ளும். ஆனால், "நாங்கள் ஆட்சி பொறுப்பில் அமர்ந்திருக்கிறோம். ஆனால், ஊழல் செய்ய மாட்டோம், அது நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல" எ‌ன்று சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

English summary
TN state BJP Deputy President Narayanan Thirupathy criticises Minister Senthil Balaji and MP Dhayanidhi Maran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X