சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே ஒரு பதவி.. பெரும் போட்டி.. தமிழக பாஜக தலைவராக போவது யார்? கடும் குழப்பத்தில் அமித் ஷா!

தமிழக பாஜக தலைவராக யாரை தேர்வு செய்வது என்று தெரியாமல் பாஜக தேசிய தலைமை குழம்பி வருவதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக பாஜகவுக்கு அடுத்த தலைவர் யார்.. கடும் போட்டியில் 6 தலைவர்கள்

    சென்னை: தமிழக பாஜக தலைவராக யாரை தேர்வு செய்வது என்று தெரியாமல் பாஜக தேசிய தலைமை குழம்பி வருவதாக தகவல்கள் வருகிறது.

    தெலுங்கானா ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்று இருக்கிறார். இதனால் தற்போது தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகி உள்ளது.

    தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறுகிறார்கள்.

    ரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கும் பாதிப்பு இல்லையாம்..சொல்கிறார் ஜி.கே.வாசன்..ரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கும் பாதிப்பு இல்லையாம்..சொல்கிறார் ஜி.கே.வாசன்..

    நான்கு பேர்

    நான்கு பேர்

    இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக வருவதற்கு நான்கு பேருக்கு இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறதாம். அதன்படி எச். ராஜா, பி. முருகானந்தம், சி.பி ராதாகிருஷ்னன், வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறதாம். ஆனால் இதில் யாரை தேர்வு செய்வது என்று தெரியாமல் பாஜக குழம்பி வருகிறது.

    போட்டி

    போட்டி

    இந்த தலைவருக்கான போட்டியில் தற்போது எச். ராஜா மற்றும் சிபி ராதாகிருஷ்னன் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இவ்வளவு நாட்கள் வெளியே தெரியாமல் இருந்த போட்டி, தற்போது வெளிப்படையாக் வெளியே தெரிய தொடங்கி உள்ளது என்கிறார்கள். இரண்டு பேரும் தலைவர் பதவிக்காக டெல்லியில் பேசி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    தெரியுமா?

    தெரியுமா?

    தேசிய அளவில் நான் முக்கிய தலைவர். தமிழகத்தில் எல்லோருக்கும் என்னை தெரியும் என்று எச். ராஜா தரப்பு பாஜக தேசிய தலைமையிடம் கூறியுள்ளதாம். அதே சமயம் சிபி ராதாகிருஷ்னன் தரப்பு, நான் எதிர்கட்சிகளை அனுசரித்து போவேன். கூட்டணிகளை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளதாம்.

    வானதி சீனிவாசன்

    வானதி சீனிவாசன்

    இதெல்லாம் போக இன்னொரு பக்கம் வானதி ஸ்ரீனிவாசன் சார்பில், தலைவர் பதவிக்காக அணுகப்பட்டு இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அதேபோல் பி. முருகானந்தம் இளைஞர், மிக மிக துடிப்பானவர். தமிழக பாஜகவிற்கு அப்படி ஒரு நபர்தான் வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

    தலைவர்

    தலைவர்

    இதனால் தமிழக பாஜக தலைவராக யாரை நியமிப்பது என்று தெரியாமல் பாஜக தேசிய தலைமை குழம்பி வருவதாக கூறப்படுகிறது. பேசாமல் வெளி ஆள் யாரையாவது நியமித்து விடலாமா என்று பேச்சு அடிப்பட்டு வருகிறது. தமிழக பாஜக தலைவராக வெளி நபர்கள் சிலர் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இன்னும் இல்லை

    இன்னும் இல்லை

    அதன்படி மத்திய அமைச்சர் ஒருவரும், பாஜக கட்சியில் இல்லாத இன்னொரு நபரும், முக்கிய அரசியல் ஆலோசகர் ஒருவரும் தமிழக பாஜக தலைவராக ஆசை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக தேசிய தலைமை இன்னும் சரியான முடிவை எடுக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

    English summary
    BJP national chief is facing difficulties in choosing Tamilnadu BJP chief.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X