சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மனுஸ்மிருதி விவகாரம்: திருமாவளவன் பேசியதற்காக மு.க.ஸ்டாலினுக்கு பாஜக பொதுச்செயலர் சிடி ரவி கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: மனுஸ்மிருதி பெண்களை இழிவுபடுத்துகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக பொதுச்செயலாளர் சிடி ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இணையவழி கருத்தரங்கம் ஒன்றில் பேசிய திருமாவளவன் மனுஸ்மிருதி எனப்படும் மனுதர்மம் பெண்களை எப்படி எல்லாம் இழிவுபடுத்துகிறது; இந்து பெண்களை விபசாரிகளாக சொல்கிறது என குறிப்பிட்டார். இந்த பேச்சின் ஒருபகுதி 1 மாதம் கழித்து வைரலாக்கப்பட்டு சர்ச்சையானது.

BJP National General Secretary CT Ravi condmens DMK President MK Stalin

இந்து பெண்களை விபச்சாரிகள் என திருமாவளவன் சொல்லிவிட்டதாக கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் திருமாவளவன் உள்ளிட்டோர் மனுதர்ம நூலை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

BJP National General Secretary CT Ravi condmens DMK President MK Stalin

இந்நிலையில் மனுஸ்மிருதி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் பாஜக பொதுச்செயலாளர் சி.டி. ரவி. அவர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

 ஹாலோவீன் ஸ்பெஷல்.. நாசா வெளியிட்ட 'ஜேக் - ஓ-லாந்தர்’ சூரியன் போட்டோ.. பொருத்தமா இருக்கே! ஹாலோவீன் ஸ்பெஷல்.. நாசா வெளியிட்ட 'ஜேக் - ஓ-லாந்தர்’ சூரியன் போட்டோ.. பொருத்தமா இருக்கே!

இந்துமதத்தையும் பெண்களையும் இழிவுபடுத்துவது திமுக, தோழமை கட்சிகளின் வழக்கமாக இருக்கிறது. தமிழ் மக்கள், திமுகவின் இந்துவிரோத நடவடிக்கைகளை சகித்துக் கொண்டிருப்பதாக ஸ்டாலின் நினைக்கிறார். அவர் கனவுலகில் இருந்து விரைவில் எழுவார். இவ்வாறு குறிப்பிட்டு #DMKAgainstHindus என ஹேஷ்டேக்கையும் இணைத்திருக்கிறார்.

English summary
BJP National General Secretary CT Ravi has condmened that DMK President MK Stalin for VCK President Thirumavalavan comments on Manusmriti.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X