சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிழல்கள் ரவி தெரியும்.. சிடி ரவி யாருன்னு தெரியுமா.. சென்னை வருகிறார்.. தமிழக பாஜக பொறுப்பாளராக!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக‌ மேலிடப் பொறுப்பாளராக கர்நாடக முன்னாள் அமைச்சர் சி.டி.ரவிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜகவில் நடிகை குஷ்பு இணைந்தபோது அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டை கொடுத்து பூச்செண்டு கொடுத்தவர் இவர்தான். இறுதி வரை குஷ்புவுடன் டெல்லியில் நிகழ்வில் இவர் பங்கேற்று இருந்தார்.

தமிழகத்தில் பாஜக மேலிடப் பொறுப்பாளராக இருந்த முரளிதர ராவ் செப்டம்பர் 26ஆம் தேதி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தமிழகத்துக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்துக்கு மேலிட பொறுப்பாளரை தேர்வு செய்வதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஈடுபட்டுள்ளார். கட்சியின் அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் உடன் இதற்கான ஆலோசனையில் ஜேபி நட்டா ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது லிஸ்ட்லயே இல்லையே.. 60 தொகுதியுடன்.. பாஜக வைக்கும் டிமாண்ட்.. ஆடிப்போன அதிமுக இது லிஸ்ட்லயே இல்லையே.. 60 தொகுதியுடன்.. பாஜக வைக்கும் டிமாண்ட்.. ஆடிப்போன அதிமுக

புரந்தேஸ்வரி

புரந்தேஸ்வரி

இதற்கிடையே தமிழகத்தின் மேலிட பொறுப்பாளராவதற்கு இருவருக்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஒருவர் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி. மற்றொருவர் தேசிய துணைத் தலைவர் புரந்தேஸ்வரி. இவர் ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதல்வர் என்டி ராமாராவின் மகள். இவர்களில் சிடி ரவி கர்நாடகாவைச் சேர்ந்தவர். புரந்தேஸ்வரி ஆந்திராவைச் சேர்ந்தவர்.

ராஜினாமா

ராஜினாமா

கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதியில் இருந்து நான்கு முறை சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ரவி. கர்நாடகா அமைச்சராக இருந்தார். இந்த நிலையில் இவர் தேசிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தொடக்கம்

தொடக்கம்

இந்த நிலையில் தென்னக மாநிலங்களை கவனித்துக் கொள்ளுமாறு சிடி ரவிக்கு தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த திங்கள் கிழமை டெல்லியில் சிடி ரவி முன்பு பாஜகவில் குஷ்பு ஐக்கியமானார். குஷ்புவுக்கு பூச்செண்டு கொடுத்து, கட்சியின் அடையாள அட்டையையும் வழங்கினார்.

தேர்வாகலாம்

தேர்வாகலாம்

வரும் அக்டோபர் 17ஆம் தேதி தமிழகத்துக்கு சிடி ரவி வருகிறார். தமிழக பாஜக தலைவர் எல். முருகனுடன் ஏற்கனவே மேலிட பொறுப்பாளர் குறித்து தலைமை ஆலோசனை மேற்கொண்டு இருந்த நிலையில், தமிழகத்துக்கு சிடி ரவி வருகை தருகிறார். இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவர் தமிழகத்துக்கு மேலிட பொறுப்பாளராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

பொறுப்பு

பொறுப்பு

தமிழகத்தின் மேலிட பொறுப்பாளராக தேர்வு செய்வதற்கான அனைத்து தகுதிகளும் சிடி ரவிக்குத்தான் இருக்கிறது என்று கட்சி தகவல்கள் கூறுகின்றன. இதற்குக் காரணம் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா சட்டசபை தேர்தலின்போது பிஎல் சந்தோஷ் மேலிட பொறுப்பாளராக இருந்தார். இவருக்குக் கீழ் நளின் குமார் மற்றும் சிடி ரவி இருவரும் பணியாற்றியுள்ளனர். இந்த அனுபவம் சிடி ரவிக்கு தமிழகத்தில் கைகொடுக்கும் என்று கணக்கு போடப்படுகிறது.

கோட்டை

கோட்டை

கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதி காங்கிரஸ் கோட்டையாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், அதை உடைத்து பாஜகவின் கோட்டையாக ரவி மாற்றியுள்ளார். மேலும், இவர் தீவிர ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர். கடந்த 2009ஆம் ஆண்டு கர்நாடகா பாஜக தலைவராக இருந்த சதானந்தா கவுடாவின் பதவிக் காலம் முடிந்தது. இந்தப் பதவி சிடி ரவியை தேடி வந்தது. ஆனால், மூத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்குமாறு கூறி ஒதுங்கிக் கொண்டார். இந்த நிலையில் தலைமை மீண்டும் இவரை தென்னகத்திற்கு அழைத்து வந்துள்ளது. இவர்தான் தமிழகத்தின் மேலிட பொறுப்பாளர் ஆவதற்கு அதிக வாய்ப்பு என்று கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

பியூஷ் கோயல்

பியூஷ் கோயல்

இதற்கு முன்னதாக தமிழக மேலிட பொறுப்பாளராக பியூஷ் கோயல், முரளிதர ராவ் இருவரும் இருந்தனர். ஆனால், இவர்களால் தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதற்குக் காரணம் பாஜக மீது பொதுவான எதிர்ப்பு அலை மற்றும் வடஇந்தியர்களை தலைவராக ஏற்றுக் கொள்ள தமிழர்கள் விரும்பாதது என்பதுதான்.

மாறி மாறி

மாறி மாறி

தென்னகத்தில் கர்நாடகாவில் மட்டும்தான் காங்கிரஸ், பாஜக என்று மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. மற்ற தென் மாநிலங்களில் மாநிலக் கட்சிகளின் கைதான் ஓங்கி இருக்கின்றன. இதற்கு விதிவிலக்கு கேரளாவும்தான். அங்கும் இடதுசாரி அல்லது காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. இதுபோன்று தென்னிந்தியாவில் கலவையான அரசியல் நிலவுவதால், அது பற்றிய அனுபவம் பெற்றவர்கள் பொறுப்புக்கு வரவேண்டும் என்று பாஜக மேலிடமும் கருதுகிறது.

English summary
BJP national GS CT Ravi may take election responsibility in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X