சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்சியே அறிவிக்கல.. அதுக்குள்ள முந்திக்கொண்டு சொன்ன ஹெச்.ராஜா.. இதோ வேட்பாளர் பட்டியல்

Google Oneindia Tamil News

Recommended Video

    அவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா- வீடியோ

    சென்னை:கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் லோக்சபா தேர்தலில் தமிழக பாஜக வேட்பாளர்கள் யார் என்பதை அக் கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் அதிமுக ஒரு கூட்டணி அமைத்தும், திமுக ஒரு கூட்டணி அமைத்தும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்கின்றன. இரு கட்சிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    Bjp national secretary h raja announces bjp lok sabha candidates list in tamilnadu

    லோக்சபா தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் உள்ளார். இந் நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக தமது வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்து வந்துள்ளது.

    அந்த கட்சிக்கு அதிமுக தரப்பு 5 தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறது. அந்த தொகுதிகளில் யார் வேட்பாளர்கள் என்று அக்கட்சி தலைமை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை.

    AIADMK vs AMMK: அஇஅதிமுக vs அமமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள் AIADMK vs AMMK: அஇஅதிமுக vs அமமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்

    ஆனால்... அதற்கு முன்பாக யார், யார் எந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்பதை அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, கன்னியாகுமரியில் பொன். ராதா கிருஷ்ணன், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்திர ராஜன் போட்டியிடுகின்றனர்.

    ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், சிவங்கையில் நான்( ஹெச் ராஜா)ஆகியோர் போட்டியிடுகிறோம். கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அவர் கூறினார். கட்சி தலைமை அறிவிக்காத நிலையில் வேட்பாளர்களை அவர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    English summary
    bjp national secretary h raja announces bjp lok sabha candidates list in tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X