சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலை வந்த பெண்கள் நெற்றியில குங்குமம் இல்லையே.. திருப்பி அனுப்பியது சரிதான்.. ஹெச்.ராஜா ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை : சபரிமலையில் தமிழக பெண்கள் திரும்ப அனுப்பட்டது சரியே என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார். அவர்கள் ஐயப்ப பக்தர்களா? எவருடைய நெற்றியிலும் சந்தனம், குங்குமப் பொட்டு இல்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த மனிதி எனும் பெண்கள் நல அமைப்பை சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 11 பேர் சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டனர். சென்னையில் இருந்து தமிழக எல்லையான கம்பம்மேடு, இடுக்கி வழியாக பம்பைக்கு இந்த குழு சென்றுள்ளது.

bjp national secretary h. raja critises the sabarimala women devotees team from chennai

அந்த குழுவின் வருகையினை அறிந்த கேரள இந்து அமைப்பினர் கோட்டயம் ரயில் நிலையத்தில் இரவு முழுவதும் காத்திருந்து, மனிதி குழுவினரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவரம் அறிந்த காவல்துறையினர், பம்பையில் மனிதி குழுவினரை நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவர்களை திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி, சாமி தரிசனம் செய்யாமல் திரும்பமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக இப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சர்ச்சை நாயகன் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :

"தமிழகத்திலிருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் பம்பையிலிருந்து திரும்ப அனுப்பப்பட உள்ளனர். செய்தி.

இவர்கள் ஐயப்ப பக்தர்களா? எவருடைய நெற்றியிலும் சந்தன குங்குமப் பொட்டு இல்லை. போலி பக்தர்கள், போராளிகள் திரும்ப அனுப்பப் பட்டது சரியே. சாமி சரணம்"

இவ்வாறு அந்த பதிவில் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

English summary
BJP National secretary H.Raja tweets that, the women team manithi came from Chennai are not sabarimala devotees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X