சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத அடிப்படையில் வெட்டிப் பிளந்தது காங்கிரஸ்தான்.. அது கூச்சலிடுவதா.. எச். ராஜா அதிரடி கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    குடியுரிமை சட்ட திருத்தம்.. ஏன் இது சர்ச்சையாகிறது?

    சென்னை: இந்தியாவை மதத்தின் அடிப்படையில் வெட்டிப் பிளந்த காங்கிரஸ் இன்று கூச்சலிடுகிறது என எச் ராஜா தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

    இந்த சட்டத்திருத்தத்தின்படி மேற்கண்ட நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக உள்ள இந்துக்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்ஸி, சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தினரும் குடியுரிமை அளிக்க அனுமதி அளிக்க வகை செய்யும்.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்தியாவை மதத்தின் அடிப்படையில் வெட்டிப் பிளந்த காங்கிரஸ் இன்று கூச்சலிடுகிறது.

    காங்கிரஸ் தயாரா

    காங்கிரஸ் தயாரா

    1947 லிருந்து இன்று வரை பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் கொல்லப்பட்ட, கற்பழிக்கப்பட்ட, மதம் மாற்றப்பட்ட, அங்கிருந்து இந்தியாவிற்கு விரட்டியடிக்கப்பட்ட இந்துக்கள் பற்றி விவாதிக்க காங்கிரஸ் மற்றும் கால்டுவெல் புத்திரர்கள் தயாரா.

    துரத்தியடிக்கப்பட்ட அகதிகள்

    மத்திய அரசின் சரியான நடவடிக்கையை எதிர்ப்பது அரசியல் மோசடி செயல். இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து கொடுமைப்படுத்தப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட அகதிகள்.

    ஊடுருவல்காரர்கள்

    ஊடுருவல்காரர்கள்

    ஆனால் முஸ்லீம்கள் ஊடுருவல்காரர்கள். இந்த உண்மையை 1947ல் இந்துக்களை ஓநாய்களிடம் தூக்கி எறிந்த காங்கிரஸ் மறைக்கப் பார்க்கிறது. மேலும் கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆன கதியே மகாராஷ்டிரத்தில் மதசார்பற்ற சிவசேனாவிற்கு ஏற்படும் என எச் ராஜா தெரிவித்துள்ளார்.

    English summary
    BJP National Secretary H Raja says that Congress party partitioned India in the name of caste. He also criticised Muslims.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X