சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனது மகள் திருமணத்துக்கு அவசியம் வரனும்... ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்த ஹெச்.ராஜா

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த ஹெச்.ராஜா..இதான் காரணமா?

    சென்னை: பாஜக தேசியச்செயலாளர் ஹெச்.ராஜா தனது மகள் திருமணத்துக்கான அழைப்பிதழை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சென்று வழங்கினார்.

    அப்போது ஸ்டாலினிடம் பேசிய ஹெச்.ராஜா, எனது மகள் திருமணத்துக்கு அவசியம் நீங்க வரனும் என அழைப்பு விடுத்துள்ளார். அதனை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் திருமண விவரம் தொடர்பாக மட்டும் பேசி அவரை அனுப்பி வைத்தார்.

    திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு... குண்டர் சட்டம் ரத்துக்கு காவல்துறையே காரணம்- ஸ்டாலின் புகார்பொள்ளாச்சி பாலியல் வழக்கு... குண்டர் சட்டம் ரத்துக்கு காவல்துறையே காரணம்- ஸ்டாலின் புகார்

    கருத்து மோதல்

    கருத்து மோதல்

    அரசியலில் அதிரடியான கருத்துக்களை முன்வைக்கக் கூடியவர் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. அதிலும், திமுகவுக்கு எதிராக என்றால் சொல்லவே வேண்டாம், அந்தளவுக்கு தனது கடும் எதிர்ப்பை ஒவ்வொரு நிகழ்விலும் பதிவு செய்வார் ஹெச்.ராஜா. எதிரும்-புதிருமாக திமுகவினரும் ஹெச்.ராஜாவும் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்வது வழக்கம்.

     அழைப்பிதழ்

    அழைப்பிதழ்

    இந்நிலையில் தனது மகளுக்கு இம்மாதம் திருமணம் வைத்துள்ள ஹெச்.ராஜா அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் அளித்து வருகிறார். ஏற்கனவே பிரதமர் மோடி, விஜயகாந்த், ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டார் ஹெச்.ராஜா.

    அண்ணா அறிவாலயம்

    அண்ணா அறிவாலயம்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஹெச்.ராஜா தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. இதனிடையே அவருக்கு இன்று நண்பகல் அண்ணா அறிவாலயத்தில் சந்திப்பதற்கு நேரம் தரப்பட்டுள்ளது. இதையடுத்து அண்ணா அறிவாலயம் சென்ற ஹெச்.ராஜாவை, பூச்சி முருகன், தலைமை நிலைய நிர்வாகி காஜா ஆகியோர் வரவேற்று அழைத்துச்சென்றனர்.

    ஸ்டாலின் புன்னகை

    ஸ்டாலின் புன்னகை

    ஸ்டாலினை சந்தித்த ஹெச்.ராஜா பொன்னாடை போர்த்தி தனது மகள் திருமண அழைப்பிதழை அவர் கையில் கொடுத்தார். அதை வாங்கி ஸ்டாலின் முகப்பு பக்கத்தை படித்து பார்த்துக்கொண்டிருந்த போதே, நீங்க அவசியம் கல்யாணத்துல கலந்துக்கனும் என அழைப்பு விடுத்துள்ளார் ஹெச்.ராஜா. அவரது அழைப்பை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் திருமண விவரத்தை தவிர வேறெந்த அரசியலும் பேசவில்லை எனக் கூறப்படுகிறது.

    தனி நபர்

    தனி நபர்

    ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது தனது மனைவி மற்றும் உறவினருடன் சென்றிருந்தார் ஹெச்.ராஜா. பின்னர் விஜயகாந்த்துக்கு அழைப்பிதழ் அளிக்க சென்ற போது தன்னுடன் உறவினர் ஒருவரையும் அழைத்துச் சென்றிருந்தார். ஆனால் ஸ்டாலினை சந்திக்க சென்ற போது மட்டும் தனி நபராக தாம் மட்டும் சென்றுள்ளார் ஹெச்.ராஜா.

    English summary
    bjp national secretary h.raja to meet mk stalin and invited his daughter marriage
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X