சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன இருந்தாலும் அவர் ஒரு அமைச்சர்.. இப்படியா பேசுவது எச்.ராஜா?

Google Oneindia Tamil News

சென்னை: கேரள அமைச்சரை ஒருமையில் விளித்து ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாஜக தேசியப் பொதுச்செயலாளர் எச்.ராஜா.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் நுழைய அனுமதிக்க கூடாது என்பது பாஜக நிலைப்பாடாக உள்ளது. சபரிமலை சன்னிதான நடை ஐப்பசி பூஜைக்காக திறக்கப்பட்டது முதலே, ராஜா பல்வேறு ட்வீட்டுகளில் கேரள அரசை விமர்சனம் செய்து கருத்து கூறி வருகிறார்.

இதுபோன்று, சபரிமலை தொடர்பாக வழக்கு போட்டது ஒரு முஸ்லீம் வழக்கறிஞர் என்று ட்வீட் செய்திருந்தார் ராஜா.

['கடவுள்' மோடி.. பிரதமர் சிலையை கோயிலுக்குள் வைத்து சாமியாக வழிபடும் கிராமம்]

ஆர்எஸ்எஸ் வழக்கா?

இதை பார்த்த நெட்டிசன் ஒருவர், 2006ல் சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்ததே ஆர்எஸ்எஸ் அமைப்புதான் என்கிறார்களே, இதற்கு பதில் சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினார். பெரியார் சிலைகளை உடைப்பேன் என கூறிவிட்டு, வழக்குகளுக்கு பயந்து, அந்த ட்வீட்டை எனது அட்மின் போட்டார் என கூறியவர் ராஜா. எனவே, இந்த ட்வீட்டுகளையும் அட்மின்தான் போட்டுக்கொண்டுள்ளார் என்று கிண்டல் தொனிக்கும் வகையில், அட்மின் என்று விளித்திருந்தார் அந்த நெட்டிசன்.

கேரள அமைச்சர்

மேலும், கேரள அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் ஆர்எஸ்எஸ் குறித்து கூறிய இந்த தகவல் அடங்கிய பத்திரிகையொன்றின் போட்டோ காப்பியையும் அவர் இணைத்திருந்தார்.

அமைச்சருக்கான மரியாதை

அமைச்சருக்கான மரியாதை

ஆனால் இதற்கு எச்.ராஜா அளித்த பதில்தான் ஷாக்கிங். ஒரு மாநிலத்தின் அமைச்சர் மட்டுமல்ல, சக மனிதனுக்கான மரியாதையைகூட தராமல், 'இவன் பொய்யன்' என்று ஒருமையில் பதிலளித்துள்ளார் எச்.ராஜா.

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

இதைப்பார்த்த நெட்டிசன்களோ, கேரள அமைச்சர், மக்களை சந்தித்து வாக்குகளை பெற்று வெற்றி பெற்று எம்எல்ஏயாகி அமைச்சராக பதவி வகிக்கிறார். சாரணர் இயக்க தேர்தலிலேகூட தோற்ற நீங்கள், அமைச்சரவை மரியாதை குறைவாக பேசலாமா என்று கிண்டல் செய்தபடி உள்ளனர்.

English summary
BJP national secretary H.Raja, using defamatory words against Kerala minister over Sabarimala issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X