சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொஞ்சமும் பிடிக்கலை.. ஆனாலும், தேமுதிகவை உதற முடியுாமல் அதிமுக தவிப்பது ஏன் தெரியுமா

Google Oneindia Tamil News

Recommended Video

    தேமுதிகவை உதற முடியுாமல் அதிமுக தவிப்பது ஏன் தெரியுமா?- வீடியோ

    சென்னை: தேமுதிகவை சுத்தமாக அதிமுகவுக்குப் பிடிக்கவில்லையாம். ஆனால் பியூஷ் கோயல்தான் விடாப்பிடியாக இருக்கிறாராம். ஏதாவது செய்து கூட்டணியில் சேருங்கள் என்று அவர்தான் அணத்தி வருகிறாராம். இதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணத்தைச் சொல்கிறார்கள்.

    அண்மைக்காலமாக ஊடக வெளிச்சத்தில் தேமுதிக இருப்பதற்கு காரணம் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி விவகாரம் தான். அதைத் தவிர அந்தக் கட்சி மக்களைப் பற்றியும் அதிமாக பேசவில்லை, கவலைப்படவில்லை. மக்களும் அதைக் கண்டு கொள்ளவில்லை.

    அதிமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தன்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்துவிட்டார். ஆனால் இதுவரை தேமுதிக பிடிகொடுத்ததாக தெரியவில்லை.

    நாளையோட கடைசி.. 4 சீட்தான்.. வந்தா வாங்க வராட்டி போங்க.. தேமுதிகவுக்கு அதிமுக கெடு? நாளையோட கடைசி.. 4 சீட்தான்.. வந்தா வாங்க வராட்டி போங்க.. தேமுதிகவுக்கு அதிமுக கெடு?

    விஜயகாந்த்தா, பிரேமலதாவா

    விஜயகாந்த்தா, பிரேமலதாவா

    வீம்பு பிடிப்பது விஜயகாந்தா? பிரேமலதாவா? என ஊரே பட்டிமன்றம் நடந்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக திமுகவுடன் தேமுதிக மோதி வருகிறது. மோடி சென்னைக்கு வந்து இறங்கிய நேரத்தில், தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்து பேசியதால் பாஜக மற்றும் அதிமுகவினர் மத்தியில்

    தேமுதிகவின் இமேஜ் கிடுகிடுவென சரிந்துவிட்டது.

    தலையில் மண்

    தலையில் மண்

    இந்நிலையில் நேற்று 'தனித்து போட்டியிட பயமில்லை', '37 அதிமுக எம்.பி.க்களால் தமிழகத்திற்கு என்ன செய்ய முடிந்தது' என பிரேமலதா விஜயகாந்த் புது குண்டை வீசினார். இது அதிமுக நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.

    அதிமுக குமுறல்

    அதிமுக குமுறல்

    பிரேமலதா பேட்டி அளித்து முடிப்பதற்குள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.,லைனுக்கு சென்ற நிர்வாகிகளும், அமைச்சர்களும் இனியும் தேமுதிக நமக்கு வேண்டுமா என கொந்தளித்தார்களாம். என்ன செய்வது நாம விட்டாலும் பாஜக, பியூஷ் கோயல் விடுவதாக இல்லையே, அதனால் தான் பொறுமை காக்க வேண்டிய சூழல் என பதில் வந்ததாம். இதனிடையே பாமக நிறுவனர் ராமதாசும் விஜயகாந்த் கட்சிக்கு உள்ள வாக்குசதவீதம் பற்றி எடப்பாடியிடம் புட்டுபுட்டு வைத்தாராம்.

    ஓட்டுக்களால் லாபம்

    ஓட்டுக்களால் லாபம்

    தேமுதிகவின் வாக்குகளால் அதிமுகவுக்கு பலன் இருக்கோ இல்லையோ, பாஜகவுக்கு கண்டிப்பாக லாபம் உண்டு. 2000,3000 ஓட்டு என்றாலும் கூட பாஜகவைப் பொறுத்தவரை அது மிகப் பெரிய லாபம். குறைந்தது நோட்டாவையாவது பீட் செய்ய அது உதவலாம் என்பதால்தான் பாஜக விடாமல் வலியுறுத்தி வருகிறதாம்.

    திகைப்பு

    திகைப்பு

    தேமுதிக தேவையே இல்லை என ராமதாஸ் கட் அண்ட் ரைட்டாக அதிமுகவிடம் சொல்லியதாக கூறப்படுகிறது. டி.டி.வி., ஸ்டாலின் ஆகிய இருவரும் தேமுதிகவை கைகழுவி விட்ட நிலையில், அதிமுகவும் கைவிட்டால் என்ன செய்வது என திகைத்து நிற்கின்றனர் தேமுதிகவினர்.

    English summary
    Sources say that though ADMK is not happy with DMDK, but it has to go with the party for the sake of BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X