சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

234 தொகுதிகளுக்கும் டூர்... அக்டோபர் 7 முதல் எல்.முருகன் சுற்றுப்பயணம்... பறக்குமா பாஜக கொடி..?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வரும் அக்டோபர் 7-ம் தேதி முதல் தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

234 தொகுதிகளுக்கும் டூர் அடிக்கும் அவர் தேர்தல் காலத்தில் எப்படி செயல்பட வேண்டும், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியெல்லாம் பாஜகவினருக்கு பாடம் எடுக்கவுள்ளார்.

திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் இன்னும் பரப்புரையை தொடங்காத நிலையில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக இந்த முறை முழு பாய்ச்சல் காட்டி வருகிறது.

வாக்காளப் பெருமக்களே வணக்கம்... இணையவழி பிரச்சாரம்... களமிறங்கும் பாஜக நட்சத்திரப் பட்டாளம்..! வாக்காளப் பெருமக்களே வணக்கம்... இணையவழி பிரச்சாரம்... களமிறங்கும் பாஜக நட்சத்திரப் பட்டாளம்..!

முருகன் டூர்

முருகன் டூர்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன். தேர்தல் ஆணையம் காட்டும் அக்கறையை விட பல மடங்கு கூடுதல் அக்கறை செலுத்தி தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் பணிகளை கவனித்து வருகிறார் முருகன். அதன் ஒரு கட்டமாக மாநில அளவில் டூர் புரோகிராம் ஒன்றை திட்டமிட்டுள்ளார்.

அனைத்து தொகுதிகள்

அனைத்து தொகுதிகள்

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடவில்லை என்றாலும் கூட 234 தொகுதிகளுக்கும் விசிட் அடிக்க இருக்கிறார் முருகன். இந்தப் பயணத்தின் மூலம் எந்தெந்த தொகுதிகளில் கட்சியின் கட்டமைப்பு வலிமையாக உள்ளது என்பதை நேரில் ஆராய்ந்து அந்த தொகுதிகள் அடங்கிய பட்டியலை அதிமுகவிடமும், டெல்லி மேலிடத்திலும் கொடுக்க இருக்கிறார் முருகன். அதன்மூலம் கூட்டணி பங்கீட்டின் போது இந்தந்த தொகுதிகள் வேண்டும் என டிமாண்ட் வைக்கப்படும்.

பாஜக எம்.எல்.ஏ.க்கள்

பாஜக எம்.எல்.ஏ.க்கள்

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு பலரும் பல வழிகளில் முயன்ற நிலையில் எல்.முருகன் மீதான நம்பிக்கையில் அவருக்கு வாய்ப்பு அளித்தார் ஜே.பி.நட்டா. பாஜக எம்.எல்.ஏக்களை சட்டமன்றத்திற்குள் அனுப்புவதே தமது தலையாய பணி என சத்தியம் செய்யாத குறையாக டெல்லியில் நட்டா முன்னிலையில் சபதம் ஏற்றவர் முருகன். இதனால் இப்போது அந்த சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மிக உறுதியாக நின்று அதற்கான காய் நகர்த்தலில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ்

தமிழக காங்கிரஸ்

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அடுத்த மாதம் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த மாதமே தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டார். திருப்பூர், கோவை, திருவண்ணாமலை, என பல மாவட்டந்தோறும் டூர் அடித்த அவர் வசந்தகுமார் மறைவை அடுத்து தனது நிகழ்ச்சிகளுக்கு பிரேக் விட்டிருக்கிறார். தேசியக் கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் இந்த முறை மாநில கட்சிகளான திமுக, அதிமுகவை முந்திக்கொண்டு பரப்புரை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bjp President L.Murugan Election Campaign from October 7
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X