சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நேரமே சரியில்லை.. தமிழிசை செல்போன் திருட்டு.. பிரஸ் மீட்டில் மர்ம நபர் கைவரிசை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செல்போனை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் இன்று நிருபர்களை சந்தித்தார். அந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழிசையும் பங்கேற்றார். பிரஸ் மீட் தீவிரமாக சென்று கொண்டிருந்தபோது, யாரோ மர்ம நபர்கள், நைசாக தமிழிசையிடமிருந்த செல்போனை அபேஸ் செய்துவிட்டனர்.

BJP President Tamilisai Soundararajans mobile phone stolen

இதுகுறித்து பின்னர்தான் தமிழிசைக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் செய்தியாளர் மீட்டிங்கில் பரபரப்பாக பேசப்பட்டது. தமிழிசை இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தாரா, இல்லையா என்பது பற்றி இன்னும் தெரியவில்லை.

டெல்லியில் ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி தீவிரம்.! ஆட்டோ கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது டெல்லியில் ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி தீவிரம்.! ஆட்டோ கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது

ஆனால், தமிழிசை சவுந்தரராஜன் சமீபத்தில்தான் தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இப்போது, எப்போதும் தன்னுடனே வைத்திருந்த செல்போனையும் இழந்துள்ளார். அக்காவுக்கு இப்போது போதாத நேரம் போல. ஏதாவது ஒரு நல்ல ஜோதிடராக பார்த்து, ஏன் இப்படி ஆகிறது என கலந்து பேச வேண்டும் என்று பாஜக வட்டாரத்தில் பேசியதை பார்க்க முடிந்தது.

தமிழிசையின் செல்போனில் கட்சி விஷயங்கள் ஏதேனும் இருந்திருக்கலாம். அதை விஷமிகள் ஹேக் செய்துவிட கூடாது என்ற கவலையும், அவர் தரப்பில் உள்ளது. எனவே, செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற வீடியோ கிராபர்கள், போட்டோகிராபர்கள் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காவல்துறையினர் பார்த்து பரிசீலித்து வருகின்றனர். அதில், திருட்டு தொடர்பாக ஏதாவது பதிவாகியிருக்கலாம் என காவல்துறை நினைக்கிறது.

English summary
BJP President Tamilisai Soundararajan's mobile phone has been stolen in a press meet at Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X