சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேரரசு பேசி விட்டார்.. ராதாரவி ஏன் வாயே திறக்காமல் உள்ளார்.. விஜய் நண்பராச்சே!

விஜய் விவகாரம் குறித்து ராதாரவி இன்னமும் கருத்து தெரிவிக்காமல் உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    தளபதி விஜய்... ரசிகர்களும்... ரெய்டும்

    சென்னை: விஜய் வீட்டில் நடந்த ரெய்டு பாஜக வட்டாரத்திலும், திரையுலக வட்டாரத்திலும் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது தப்பான ரெய்டு என்று பாஜகவிலேயே சிலர் கருதத் தொடங்கியுள்ளனர். அதே போலத்தான் திரையுலகிலும் இந்த ரெய்டால் பாஜக மீது அதிருப்தி வலுத்துள்ளது.

    உண்மையில் விஜய் வீட்டில் ஏன் ரெய்டு நடத்தினார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. அவரிடமிருந்து எதுவுமே கைப்பற்றப்படவில்லை. சிக்கியது என்னவோ அன்புச்செழியன் மட்டுமே. அவருக்கும் விஜய்க்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் நடித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு அன்புச் செழியன் வட்டிக்குப் பணம் கொடுத்திருக்கிறார் போல. அவ்வளவுதான்.

    ஆனால் இந்த ரெய்டு விஜய்க்கு எதிரானது என்று பேச்சு வலுத்து வருகிறது. காரணம், பாஜகவினர் அடுத்தடுத்து விஜய்க்கு எதிராக பேசி வருவதும் போராட்டம் நடத்துவதுதான் காரணம். ஒரு வேளை பாஜகவின் திட்டமிட்ட செயலா இது என்றும் கேள்விகள் எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.

     எங்க எங்க "மாஸ்டர்" வரட்டும்.. இருக்கு கச்சேரி.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்.. !

    பேரரசு

    பேரரசு

    இந்த நிலையில் பாஜகவுக்குள்ளேயே விஜய்க்கு ஆதரவான குரல்கல் வெடிக்க தொடங்கி விட்டன. இயக்குநர் பேரரசு அதில் முக்கியமானவர். இவர் சமீபத்தில்தான் பாஜகவில் இணைந்தார். விஜய்யின் திரைத்துறை வளர்ச்சியில் பேரரசுவின் பங்கு மிக முக்கியமானது. அடுத்தடுத்து திருப்பாச்சி, சிவகாசி என சூப்பர் ஹிட் படங்களை விஜய்யை வைத்துக் கொடுத்தவர் இவர். விஜய் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகராக உருவெடுக்க இந்த படங்கள் முக்கிய காரணம்.

    அதிருப்தி

    அதிருப்தி

    பாஜகவில் இணைந்திருந்தாலும் கூட விஜய்க்கு எதிராக பாஜகவினர் நடத்திய போராட்டம் கண்டனத்துக்குரியது தேவையற்றது என்று பேரரசு பகிரங்கமகாவே அதிருப்தி தெரிவித்துள்ளார். இதை விஜய் ரசிகர்கள் மனமுவந்து பாராட்டி வரவேற்றுள்ளனர். நீங்கள் பாஜகவை விட்டும் வெளியே வாங்க என்றும் அன்புடன் பலர் கோரிக்கையும் விடுத்து வருகின்றனர். அதேபோல எஸ்வி சேகரும் கூட மறைமுகமாக விஜய்க்கு எதிரான போராட்டத்தை கண்டித்துள்ளார்.

     சர்க்கார் படம்

    சர்க்கார் படம்

    அதேசமயம், நடிகர் ராதாரவி கம்மென்று இருப்பது விஜய் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. விஜய் தனது பல படங்களில் ராதாரவிக்கு நல்ல நல்ல கேரக்டர்களைக் கொடுத்தவர். ரஜினியே கூட ராதாரவியை சமீப காலமாக தனது படங்களில் நடிக்க வைப்பது இல்லை. ஆனால் விஜய் தொடர்ந்து தனது படங்களில் வாய்ப்பளித்து வருகிறார். கடைசியாக சர்க்கார் படத்தில் ராதாரவிக்கு ரெண்டு என்ற கேடரக்டரில் நடிக்க வாய்ப்பளித்திருந்தார். அந்த வேடத்தில் ராதாரவியும் பிரமாதமாக நடித்திருந்தார்.

    விஜய் ரசிகர்கள்

    விஜய் ரசிகர்கள்

    ஆனால் இன்று விஜய்க்கு எதிராக பாஜகவினர் நடத்திய போராட்டம் குறித்து ராதாரவி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளார். பாஜகவினர் போராட்டம் தவறு என்று பேரரசு கூறியுள்ள நிலையில் ராதாரவி அமைதி காத்திருப்பது விஜய் ரசிகர்களை வேதனை அடைய வைத்துள்ளது. எங்களது தளபதி தொடர்ந்து ராதாரவிக்கு வாய்ப்பளித்து வருகிறார். ஆனால் விஜய்க்கு எதிராக பாஜகவினர் பேசி வருவதை ராதாரவி கண்டிக்காமல் உள்ளாரே என்று அவர்கள் வேதனைப்படுகின்றனர்.

    English summary
    why bjp person radharavi didnt comment yet on vijay issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X