சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டிரைட்டா மேட்டருக்கு வந்த ராதாரவி.. மிரண்டு போன அதிமுக.. வேடிக்கை பார்க்கும் திமுக..!

நமது அம்மா கட்டுரைக்கு ராதாரவி பதிலடி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவில் யாராவது ஒரு முக்கிய பிரமுகர்கள், அதிமுக, திமுக உட்பட பிரதான கட்சிகளுக்கு பதிலளித்து கொண்டே இருக்கிறார்கள்.. அந்த வகையில் இப்போது ராதாரவி, அதிமுகவுக்கு பதிலடி தந்துள்ளார் .

சில மாதமாகவே அதிமுக - பாஜக கூட்டணிக்குள் இணக்கமான சூழல் இல்லாமலேயே இருந்து வந்தது.. இப்படிப்பட்ட சூழலில்தான் வேல்யாத்திரை விவகாரம் கிளம்பியது.

எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசு தடை விதித்தது.. ஹைகோர்ட்டும் இதற்கு தடை சொன்னது.. எனினும் தடையை பாஜகவினர் யாத்திரைக்கு புறப்பட்டபோதே, இது அதிமுக கூட்டணிக்கு எதிரான செயலாக பார்க்கப்பட்டது.

வானதி

வானதி

எல்லாருக்கும் ஏன் பாஜகவின் வேல் யாத்திரை மீதே குறியாக இருக்கிறது என்று வானதி சீனிவாசன் கேட்டார்.. மேலும் "திமுகவும் - அதிமுகவும் மறைமுக கூட்டு" என்ற பாஜக தலைவர்களின் பேச்சும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

 நமது அம்மா

நமது அம்மா

இதுபோன்ற சூழலில்தான் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான "நமது அம்மா"வில் பதில் தரப்பட்டது.. "சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகம் அனுமதிக்காது... இந்திய தேசத்திற்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்" என்றது.

 இந்துத்துவா

இந்துத்துவா

ஒரு விஷயத்தைச் சொல்லவேண்டுமானால், தமிழகத்தில் பாஜக என்ற எஞ்சின் இல்லையென்றால், அதிமுக என்ற ரெயில் நகராது... சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் பாஜக நிலையாக கால் ஊன்றும். தமிழகத்தில் பாஜகவை தவிர எல்லா கட்சிகளுமே கூட்டணி குறித்த குழப்பத்தில் உள்ளனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அது குறித்த கவலையே எங்களுக்கு கிடையாது" என்றார்.

 என்ஜின்

என்ஜின்

ஒரு விஷயத்தைச் சொல்லவேண்டுமானால், தமிழகத்தில் பாஜக என்ற எஞ்சின் இல்லையென்றால், அதிமுக என்ற ரெயில் அதிமுக என்ற ரெயில் நகராது... சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் பாஜக நிலையாக கால் ஊன்றும். தமிழகத்தில் பாஜகவை தவிர எல்லா கட்சிகளுமே கூட்டணி குறித்த குழப்பத்தில் உள்ளனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அது குறித்த கவலையே எங்களுக்கு கிடையாது" என்றார்.

 வேட்பாளர்

வேட்பாளர்

ஏற்கனவே முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டியது எங்கள் கட்சி தலைமைதான் என்று பாஜக சொல்லி வந்த நிலையில், இப்போது, அதிமுக என்ற ஆலமர கட்சியே, பாஜக எஞ்சின் இல்லாமல் ஓடாது என்ற ராதாரவியின் நேரடி கருத்தை அதிமுகவினர் நோட் பண்ணுவாங்களா? ஆனால், நடந்து வரும் பாஜக - அதிமுகவின் இந்த விரிசல் போக்கை திமுக தரப்பும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கிறது.

English summary
BJP Radharavi replied to ADMKs statement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X