சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக அரசு மீது அட்டாக்..... தமிழிசைக்கு அமித்ஷா க்ரீன் சிக்னல்

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக அரசை விமர்சிக்கும் பாஜக | தண்ணீர் பிரச்சினைக்கு என்ன தீர்வு தமிழிசை கேள்வி

    சென்னை: லோக்சபா தேர்தலில் படுதோல்விக்கு காரணமே அதிமுக அரசுதான் என்பதை தாமதமாக உணர்ந்துள்ள பாஜக மேலிடம் அக்கட்சியிடம் இருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளது. அதிமுக அரசு மீதான விமர்சனங்களை முன்வைக்க தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதியும் கொடுத்துள்ளதாம் டெல்லி மேலிடம்.

    அதிமுகவின் முதுகில் ஏறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்துவிடலாம் என்பது பாஜகவின் கணக்கு. ஆனால் ஆளுமை இல்லாத அதிமுக தலைமை மீது வாக்காளர்களுக்கு நம்பிக்கை எதுவும் இல்லை என்பதை வெளிப்படுத்திவிட்டது தேர்தல் முடிவுகள்.

    BJP ready to attack AIADMK Govt?

    வடகிழக்கு மாநிலங்களைப் போல கட்சிகளை வளைத்துப் போட்டு வாக்குகளை அள்ளிவிடலாம் என்கிற பாஜகவின் கனவில் மண் அள்ளிப்போட்டுவிட்டது தமிழகம். பாஜகவின் தமிழர் விரோத கொள்கைகளால் பெரும் கோபத்தில் மக்கள் இருப்பதையே தேர்தல் முடிவுகள் தெரிவித்தும் இருக்கின்றன.

    இதனால் அடுத்த கட்ட வியூகங்களுடன் களமிறங்க பாஜக திட்டமிட்டுள்ளது. முதலாவது அதிமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் இந்த ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கும் போக்கை நிறுத்தலாம் என முடிவு செய்துள்ளதாம் பாஜக.

    "பொம்பளை பிள்ளையை வச்சுக்கிட்டு.. இப்படி ரோட்டுல வரலாமாம்மா?".. கரூரை கலக்கும் எஸ்பி!

    டெல்லியில் நடைபெற்ற மாநில பாஜக தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது, அதிமுக அரசின் நடவடிக்கைகளை முழுமையாக நாம் ஆதரிக்க வேண்டியது இல்லை. கடுமையாகவும் விமர்சிக்கலாம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம்.

    பாஜக மேலிடத்தின் இந்த உத்தரவுக்குப் பின்னரும் கூட தமிழிசையால் கடுமையாக அதிமுக அரசை தாக்க முடியாமல் இருக்கிறாராம். ஏனெனில் தமிழக பாஜக பிரமுகர்கள் பலரும் அதிமுக அரசுடன் அப்படி ஒரு ஐக்கியமாக இருக்கிறார்களாம். இதனால் டெல்லியை எப்படி சமாளிப்பது என தமிழிசை தரப்பு தடுமாறி வருகிறதாம்.

    English summary
    According to the sources, BJP leaders may attack the ruling AIADMK Govt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X