சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பாஜக அறிவுசார் பிரிவின் தலைவர்".. ரஜினியின் கட்சிக்கு இவர்தான் தலைமை ஒருங்கிணைப்பாளர்.. பின்னணி!

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தொடங்க போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஒருவழியாக அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். முதல்முறையாக தனது அரசியல் அறிவிப்பு குறித்து தெளிவான நிலைப்பாடு ஒன்றை ரஜினிகாந்த் எடுத்துள்ளார்.

டிசம்பர் 31ம் தேதி கட்சி அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடுவேன் என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மக்களுக்காக என் உயிர் போனாலும் சந்தோஷம்தான்.. அரசியலுக்கு வருவது உறுதி- ரஜினிகாந்த் பேட்டி தமிழக மக்களுக்காக என் உயிர் போனாலும் சந்தோஷம்தான்.. அரசியலுக்கு வருவது உறுதி- ரஜினிகாந்த் பேட்டி

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் யாருடன் கூட்டணி வைப்பார், கொள்கை என்ன, தேர்தலில் எப்படி போட்டியிடுவார் என்பதெல்லாம் இன்னும் உறுதியாகவில்லை. இன்று பேட்டி அளித்த அவர், தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன்.

வாக்கு கொடுத்து விட்டேன்

வாக்கு கொடுத்து விட்டேன்

நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு. நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி என்று குறிப்பிட்டு இருந்தார்.

உறுப்பினர்

உறுப்பினர்

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தொடங்க போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் அர்ஜுன் மூர்த்தி பாஜகவை சேர்ந்தவர். இவர் பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவர்.

பாஜக வேல் யாத்திரை

பாஜக வேல் யாத்திரை

பாஜக தொடங்கிய வேல் யாத்திரையில் இவர் முக்கிய பங்கு வகித்தார். வேல் யாத்திரை தொடங்கியதில் அர்ஜுன் மூர்த்தி மாஸ்டார்மைண்டாக செயல்பட்டார் என்று கூறப்படுகிறது. பாஜக தேசிய தலைவர்களுக்கு நெருக்கமானவர். அதேபோல் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் கர்நாடாகாவை சேர்ந்த சிடி ரவிக்கும் அர்ஜுன் மூர்த்தி நெருக்கமானவர்.

 கட்சி

கட்சி

இந்த நிலையில் அர்ஜுன் மூர்த்தி தான் தற்போது ரஜினி தொடங்க போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர். பொதுவாக தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் தலைவருக்கும் நிகரான அதிகாரம் கொண்டு இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவை சேர்ந்த ஒருவருக்கு ரஜினி இந்த பொறுப்பை வழங்கி உள்ளார்.

கூட்டம்

கூட்டம்

ரஜினி கட்சிக்கு வடிவம் கொடுக்க போவது இவர்தான். அதாவது உறுப்பினர்களை, தொண்டர்களை ஒருங்கிணைத்து அதை கட்சியாக மாற்றும் பணியை இவர்தான் மேற்கொள்வார். கட்சியின் எதிர்காலத்தை இவர்தான் தீர்மானிக்க போகிறார். கூட்டணி குறித்த ஆலோசனியிலும் இந்த பாஜக அறிவுசார் பிரிவு தலைவர் அர்ஜுன் மூர்த்தி முக்கிய பங்கு வகிக்க போகிறார்.

 விலகல்

விலகல்

இந்த நிலையில் பாஜக நிர்வாகியான அர்ஜுன் மூர்த்தி இப்போது பாஜகவில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வருகிறது. அர்ஜுன் மூர்த்தியை கட்சியை விட்டு நீக்கிவிட்டதாக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கருநாகராஜன் தெரித்துள்ளார். இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் பாஜக என்பதை நீக்கிவிட்டு, தற்போது "தலைவருடன்'' இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
BJP's leader Arjun Moorthy will be Rajinikanth's new party head Coordinator.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X