• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"சீட்" நெருக்கடிகள்.. திமுகவுக்கு பெரும் வெற்றி கிடைக்க.. மறைமுகமாக உதவுகிறதா பாஜக?

|

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவின் சடுகுடு ஆட்டங்கள் அனைத்தும் திமுக வெற்றி பெற மறைமுகமாக உதவுகிறதா? என்கிற சந்தேகங்களையே எழுப்புகின்றன.

பாஜகவை பொறுத்தவரை மாநிலங்களில் எப்படியாவது ஆட்சியில் இடம்பெற்றுவிட வேண்டும்... அதேபோல மாநில கட்சிகளை கபளீகரம் செய்து அந்த கட்சிகளையே எதிர்காலத்தில் இல்லாமல் ஆக்கிவிட்டு அந்த இடத்தில் உட்கார்ந்துவிடுவது என்பதுதான் லட்சியம்.

பல மாநிலங்களில் பாஜக ஆடிய இந்த பரமபத விளையாட்டு இப்போது தமிழகத்திலும் வந்துவிட்டது. இந்தியாவிலேயே பாஜகவால் காலூன்ற முடியாத ஒரு தனித்தீவாகத்தான் தமிழகம் இருந்து வருகிறது. இந்த சரித்திரத்தை தகர்த்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் படுதீவிரமாக இருக்கிறது பாஜக.

டெல்லி மேலிடம்

டெல்லி மேலிடம்

இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் அரதபழசான கோட்பாடு எல்லாம் இப்போது பாஜகவிடம் இல்லை. இருந்தபோதும் தமிழக பாஜக அப்படி இப்படி செய்தாவது லைம் லைட்டில் இருக்க படாதபாடுபடுகிறது. அதேநேரத்தில் பாஜகவின் டெல்லி தலைமையோ அசால்ட்டாக விளையாட்டை தொடங்கி விட்டது.

நெருக்கடியில் அதிமுக

நெருக்கடியில் அதிமுக

இப்போதைய நிலையில் கேட்கிற தொகுதிகளை, அதுவும் ஜெயிக்கிற தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து எப்படியும் பறித்துவிடும் பாஜக. அதிமுகவின் வாக்கு வங்கியை மெல்ல மெல்ல தன்வசமாக்கும் பாரம்பரிய யுக்தியை வெற்றிகரமாக செயல்படுத்த தொடங்கிவிட்டது என்பதை அமித்ஷாவின் சென்னை வருகை சொல்லிவிட்டது.

சென்னையில் அமித்ஷா

சென்னையில் அமித்ஷா

சென்னைக்கு வந்த அமித்ஷாவை அதிமுக தொண்டர்கள் கட்சி கொடியோடு வரவேற்றது, அரசு விழாவாக இருந்தாலும் அமித்ஷா முன்னிலையிலேயே கூட்டணியை சுரத்தே இல்லாமல் அறிவித்தது ஆகியவை மட்டுமல்ல.. இன்னொன்றையும் லாவகமாக செய்து கொண்டே இருக்கிறது பாஜக. அது எம்ஜிஆர் என்ற ஆளுமையை தனதாக்கிக் கொண்டது.

எம்ஜிஆரும் அதிமுகவும்

எம்ஜிஆரும் அதிமுகவும்

இதுவரை அதிமுக நிகழ்ச்சிகளில் ஜெயலலிதா படம்தான் இருக்கும். ஜெயலலிதாவுக்கு மட்டுமே மரியாதைகள் செலுத்தப்படும். பிறந்த நாள், இறந்த நாளன்றுதான் எம்ஜிஆர் கவனத்துக்கு வருவார். எம்ஜிஆர் மனைவி வி.என். ஜானகி அம்மாள் நினைவுநாள் கூட பத்திரிகை விளம்பரங்களில் ஒரு சிங்கிள் கால நினைவஞ்சலியாகத்தான் இருக்கும்.

பாஜக வசமான எம்ஜிஆர்

பாஜக வசமான எம்ஜிஆர்

வேல்யாத்திரையில் எம்ஜிஆரை பயன்படுத்தியது பாஜக. அப்போதும் அதிமுக கண்டுகொள்ளவில்லை. அமித்ஷா நிகழ்ச்சியில் வழக்கத்துக்கு மாறாக எம்ஜிஆர் படத்துக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. இதை பார்த்தால் எம்ஜிஆரை பாஜகவுக்கு அதிமுக தாரைவார்த்து கொடுத்துவிட்டதா? என்கிற கேள்வி வருகிறது. இப்படி மெல்ல மெல்ல பாஜகவிடம் தன்சுயத்தை- தனது இருப்பை வேறுவழியே இல்லாமல் பறிகொடுத்து வருகிறது அதிமுக.

திமுகவுக்கு உதவுகிறதா பாஜக?

திமுகவுக்கு உதவுகிறதா பாஜக?

இதேநிலை நீடித்தால் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவின் தொகுதிகளில் பாஜக வெல்லும்; அதிமுக கணிசமான தொகுதிகளை இழந்து நிற்கும். இது ஒருவகையில் இந்த சட்டசபை தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உதவக் கூடியதாகவே இருக்கும். எதிர்காலத்தில் திமுக- பாஜக என்கிற இருமுனை போட்டி தமிழகத்தில் நிலவத்தான் பாஜக விரும்புகிறதோ என்கிற கேள்வி எழாமலும் இல்லை. தனக்கு தோதான ஒரு எதிர்க்கட்சிதான் எப்போதும் தேவை என்பதும் பாஜகவின் இன்னொரு பாணி.

டார்கெட் 2026

டார்கெட் 2026

அதாவது அடிப்பது போல் அடிப்பதற்கும் அழுவது போல் நடிப்பதற்கும் ஏற்றதான ஒரு கட்சியை தனக்கு எதிரான கட்சியாக வைத்துக் கொள்வதுதான் பாஜகவின் பாணி. இந்த எதிர்க்கட்சி பாத்திரத்துக்கு திமுகதான் சரி என கணக்குப் போட்டிருக்கலாம் பாஜக. அதனால் இந்த தேர்தலில் திமுக ஜெயிக்கட்டும்; 2026 தேர்தலில் அதிமுகவின் இடத்தில் நாம் வந்துவிடுவோம்... அப்போது ஆட்டத்தை பார்த்து கொள்ளலாம் என்கிற கணக்கில் இருக்கிறதா பாஜக என்கிற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.

 
 
 
English summary
Sources said that BJP's political games may help for DMK win in TamilNadu Assembly Election.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X