• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"எனக்கு இன்னொரு பேரு இருக்கு.. நான் மட்டும் ஒரு போன் போட்டா"... அதிர வைக்கும் எஸ்.வி.சேகர் வீடியோ!

|

சென்னை: "என்னை எல்லோருமே சொல்வாங்க, நீ ஒரு பிராமண சத்திரியன் என்று... ஆனால், ஜான் பாண்டியனில் இருந்து எல்லோருமே எனக்கு நண்பர்கள்தான்.. பிரதமர் மோடிக்கு என்னை பற்றி நன்றாக தெரியும்.. போனில் நான் சொன்னாலே போதும், 5 ஆயிரம் ஓட்டு மாறும்.. அந்த அளவுக்கு எனக்கு செல்வாக்கு இருக்கு.. ஆனா எங்க பேசனுமோ அங்க பேசுவேன்" என்று ஒரு வீடியோவை போட்டு தெறிக்க விட்டுள்ளார் எஸ்வி சேகர்.

எஸ்வி சேகரை பொறுத்தவரை தீவிரமான பாஜக ஆதரவாளர்.. குறிப்பாக பிரதமர் மோடி மீது அபரிமிதமான நம்பிக்கையை, பாசத்தை வைத்திருப்பவர்.. அசைக்க முடியாத தலைவர் மோடிதான் என்பதை பல தருணங்களில் எஸ்வி சேகர் வெளிப்படுத்தியும் வருகிறார்.

அதேபோல, இங்கிருக்கும் ரஜினிகாந்த், விஜய் பற்றியும் உயர்வான கருத்துக்களை சொல்வார்.. மற்றொரு புறம் அருணன் உட்பட பலரை தாறுமாறாக விமர்சனமும் செய்வார்... அதனாலேயே சோஷியல் மீடியாவில் இவர் வைரலாகியும் வருகிறார்.. இதில் ஹைலைட் அந்த கெட்டு போன பால் பாக்கெட் சமாச்சாரம்தான்!

சச்சின் பைலட் ரிட்டர்ன்.. சாதித்தது சோனியாவா, பிரியங்காவா? ம்ஹூம்.. இருவருக்கும் கிரெடிட் இல்லை

கொடி

கொடி

இவர் சில தினங்களுக்கு முன்பு அதிமுக பற்றி ஒரு கருத்து சொல்லி இருந்தார்.. அதாவது அதிமுக உருப்பட வேண்டுமென்றால் கட்சியின் பெயரையும், கொடியையும் மாற்ற வேண்டும் என்றார். இதை பார்த்து அதிமுகவினர் கொந்தளித்துவிட்டனர்.

 காமராஜ்

காமராஜ்

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் முதல் நபராக வந்து கண்டனம் சொன்னார்.. அதேபோல முதல்வரும், எஸ்விசேகர் ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார் என்றார்.. பிஜேபி கட்சி எஸ்விசேகரை ஒரு பொருட்டாகவே ஏற்று கொள்வதாக தெரியவில்லை.. அதனால் நாமும் அவர் சொல்வதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது என்றார் அமைச்சர் காமராஜ்.

  புது திட்டம்.. ஆழ்கடலுக்கே சென்று அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்
  அதிமுக

  அதிமுக

  இப்படி ஒட்டுமொத்த அதிமுகவும் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எஸ் வி சேகர் திரும்பவும் ஒரு வீடியோ போட்டுள்ளார்.. அதில், "நான் யாருக்கும் பயப்படுபவன் கிடையாது... என்னை எல்லோருமே சொல்வாங்க, நீ ஒரு பிராமண சத்திரியன் என்று... எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க.. ஜான் பாண்டியனில் இருந்து எல்லோருமே என்னுடைய ஃபிரண்ட்ஸ்தான்.. எனக்கு ஏதாவது ஒரு பிரச்சனையென்றால் ஓடிவந்து குரல் கொடுக்கக்கூடியவர் மீனவ சங்கத் தலைவர் அன்பழகன்... அதுபோல நிறைய பேர் இருக்காங்க.

  உதவி

  உதவி

  பாஜக பதவிக் கொடுக்கவில்லை என்பது எனக்கு வருத்தமே கிடையாது... என்னைப் பொறுத்தவரை மோடி அரசாங்கம் நடைபெற ராமருக்கு அணில் மாதிரி உதவி செய்கிறேன்... அவ்வளவுதான்.. நான் என்ன செய்கிறேன் என்பது மோடிக்கு தெரியும்.

   நோட்டீஸ்

  நோட்டீஸ்

  நீங்கள் ஏன் பிரச்சாரத்திற்கு வரவில்லைன்னு என்னை சிலர் கேட்கிறாங்க.. பிரச்சாரத்திற்கு கூப்பிட்டால் வரப்போகிறேன்.. கூப்பிடாமல் எப்படி போறது? அடையாளமே தெரியாத யாரோ ஜீப்பில் ஏறி பேசிக்கொண்டு போவார்கள்... அடையாளம் தெரிந்த நான் நோட்டீஸ் கொடுத்துக்கொண்டு பின்னால ஓட முடியுமா? நான் எல்லாம் போனில் சொன்னாலே 5 ஆயிரம் ஓட்டு மாறிப்போகக்கூடிய அளவுக்கு செல்வாக்கு எனக்கு இருக்குன்னு எனக்கு தெரியும்.. அதனால எந்த இடத்தில் எங்க பேசணுமோ அங்க பேசுவேன்.

   பயப்பட மாட்டேன்

  பயப்பட மாட்டேன்

  இது எல்லாத்துக்கும் மேல நூறு சதவீதம் நான் கடவுளை நம்புகிறேன்.. ஆனா பயப்படுபவன் கிடையாது. பயந்தால் பொதுவாழ்க்கைக்கு வர முடியாது... என் வீட்டை 5 முறை தாக்கியிருக்காங்க.. 2 முறை பெட்ரோல் பாம் போட்டிருக்காங்க.. 3 முறை கல்லால் அடிச்சி தாக்கினாங்க.. நான் பயந்திருந்தால் முதல் தடவையே விட்டுட்டு போயிருப்பேன்... நான் யார்ன்னு எனக்கு தெரியும்.

  மோடி

  மோடி

  சோ தான் என்னை மோடியிடம் அறிமுகம் செய்து வைத்தார்... மோடிதான் என்னை பாஜகவில் சேர சொன்னார்... குஜராத் மாநிலம் வருமாறு என்னை கூப்பிட்டார்.. நானும் போயிட்டு வந்தேன். என் நாடகத்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்று எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

   பால் பாக்கெட்

  பால் பாக்கெட்

  இந்த பதில்களை எஸ்வி சேகர் எல்லாம் யாருக்கு சொல்கிறார், எதை தெரியப்படுத்துகிறார் என விளங்கவில்லை.. ஆனால், தமிழ்நாட்டில இருக்கிற கொரோனா பிரச்சனை எல்லாம் விட்டுட்டு, பால் பாக்கெட் விவகாரத்துக்கு முக்கியத்துவம் தந்து நடவடிக்கை எடுத்தது மிக சரியான காரியமா என்பதுதான் இன்னமும் தெரியவில்லை.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  tamil actor and bjp s ve shekher says about pm modi
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X